Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

140 கிமீ வேகம், 6.5 அடி உயரம்.. குர்னூர் பிராரை இந்திய அணியில் தேர்வு செய்த பின்னணி இதுதான்

மும்பை: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை பலப்படுத்த ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோருக்கு ஆதரவாக புதிய வேகப்பந்து வீச்சாளர்களை பிசிசிஐ தேடி வருகிறது. இந்நிலையில், பஞ்சாப்பைச் சேர்ந்த 6.5 அடி உயர இளம் வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார். அவரை இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்தது மிகச்சரியான முடிவு என்று இந்திய முன்னாள் ஜாம்பவான் ஜாகீர் கான் பாராட்டியுள்ளார்.

குர்னூர் பிரார் 140 கிமீ வேகத்திற்கு மேல் தொடர்ந்து பந்துவீசும் திறன் கொண்டவர். அவரது உயரத்தின் காரணமாக கூடுதல் பவுன்ஸ் கிடைப்பதால் பேட்ஸ்மேன்கள் திணறுகின்றனர். இது குறித்து ஜாகீர் கான் கூறுகையில், "அதிவேகத்தில் பந்துவீசும் இளம் வீரர்கள் இந்திய அணிக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. குர்னூர் பிரார் நீண்ட காலம் இந்திய அணிக்காக விளையாடும் திறன் கொண்டவர். அவரை உடனடியாக இந்திய அணிக்குள் கொண்டு வந்தது நல்ல விஷயம். அவரிடம் அற்புதமான திறமை உள்ளது. நான் சமீபத்தில் அவரது பந்துவீச்சை பார்த்து ஈர்க்கப்பட்டேன்" என்றார்.

Why Gurnoor Brar was Picked in Indian test team Zaheer Khan explains selection of 6 5ft pace sensation

கடந்த 2024-25 ரஞ்சி டிராபி சீசனில் குர்னூர் பிரார் 7 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பீகார் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதுவே இவரது சிறந்த பந்துவீச்சாகும். ஒட்டுமொத்தமாக அந்த சீசனில் 12 போட்டிகளில் 33 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும், ஷெர்-இ-பஞ்சாப் டி20 தொடரிலும் 11 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்தவராக திகழ்ந்தார்.

சமீபத்தில் இலங்கை ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய குர்னூர் பிரார், 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதுமட்டுமின்றி, சமீபத்தில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் 20 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, பேட்டிங்கிலும் 18 பந்துகளில் 36 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் திலும் சுதீராவின் ஒரே ஓவரில் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

38 பந்தில் 92 ரன்.. 8 சிக்ஸ், 8 ஃபோர்.. அனுஜ் ராவத் வெறியாட்டம்.. டிபிஎல் தொடரில் நடந்த சம்பவம்

38 பந்தில் 92 ரன்.. 8 சிக்ஸ், 8 ஃபோர்.. அனுஜ் ராவத் வெறியாட்டம்.. டிபிஎல் தொடரில் நடந்த சம்பவம்

ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமான குர்னூர் பிரார், தற்போது ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலே-யில் தொடங்க உள்ள இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகமாக உள்ளார்.

Story first published: Tuesday, August 11, 2026, 10:43 [IST]
Other articles published on Aug 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+