Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொயீன் அலி ஏன் விளையாடல? காரணத்த சொல்லியிருக்காரு 'தல' தோனி!

மும்பை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டி சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இடையில் நடைபெற்று வருகிறது.

முதலில் தன்னுடைய இன்னிங்சை துவக்கிய சிஎஸ்கே 4 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை அடித்துள்ளது.

இந்த போட்டியில் மொயீன் அலி பங்கேற்கவில்லை. இதற்கான காரணத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார் தோனி.

19வது போட்டி

19வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 19வது போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சிஎஸ்கே, அதிரடியாக விளையாடி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்களை அடித்துள்ளது. இதையடுத்து 192 ரன்களை இலக்காக கொண்டு ஆர்சிபி ஆடி வருகிறது.

அணியில் இல்லாத மொயீன் அலி

அணியில் இல்லாத மொயீன் அலி

இன்றைய போட்டியில் மொயீன் அலி மற்றும் லுங்கி நிகிடி ஆகியோர் சிஎஸ்கேவில் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக, இம்ரான் தஹிர் மற்றும் பிராவோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். துவக்கத்தில் ருதுராஜ் மற்றும் டூ பிளசிஸ் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அளித்தனர்.

மொயீனுக்கு ஓய்வு

மொயீனுக்கு ஓய்வு

புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆர்சிபிக்கு எதிராக மிடில் ஆர்டரை பலப்படுத்த வேண்டிய மொயீன் அலிக்கு தற்போது ஒய்வு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த போட்டிகளில் அவர் சிறப்பான போட்டிகளை கொடுத்துள்ளார். 4 போட்டிகளில் விளையாடி 188 ரன்களை அடித்துள்ளார். இதில் 3 அரைசதங்கள் அடங்கும். மேலும் 4 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.

தோனி வெளிப்படை

தோனி வெளிப்படை

இந்நிலையில் அவர் இன்றைய போட்டியில் இடம்பெறாதது குறித்து டாசின்போது எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார். காயத்திலிருந்து மொயீன் அலி இன்னும் முழுமையாக பிட்டாகவில்லை என்றும் அதனால் அவர் இன்றைய போட்டியில் விளையாடவில்லை என்றும் தோனி தெரிவித்துள்ளார்.

இம்ரான் தஹிருக்கு வாய்ப்பு

இம்ரான் தஹிருக்கு வாய்ப்பு

மேலும் இன்றைய போட்டியில் ஸ்பின்னர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் இம்ரான் தஹிரை மொயீன் அலிக்கு பதிலாக அணியில் கொண்டு வந்துள்ளதாகவும் தோனி மேலும் தெரிவித்துள்ளார். கடந்த 3 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி கொண்டுள்ள சிஎஸ்கே இன்றைய போட்டியில் அதை தொடர தீவிரம் காட்டி வருகிறது.

Story first published: Sunday, April 25, 2021, 20:55 [IST]
Other articles published on Apr 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+