Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பையில் பும்ரா சந்தேகம்.. ரோகித் சொன்ன பதில்.. தெ.ஆப்பிரிக்கா ஆட்டத்தில் ஏன் இல்லை

திருவனந்தபுரம் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 முக்கிய மாற்றங்கள் மேற்கொண்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா தொடரில் புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா போன்ற அனுபவ வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் பும்ராவை நம்பியே இந்திய அணி இருந்த நிலையில் தற்போது திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.

பும்ரா இல்லை

பும்ரா இல்லை

ஏற்கனவே பும்ரா இரண்டு மாதங்களுக்குப் பிறகு காயத்திலிருந்து குணம் அடைந்து இந்திய அணிக்கு திரும்பினார். ஆஸிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடாத பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் பங்கேற்றார். பும்ரா பழைய மாதிரி பந்து வீசவில்லை என்றாலும் அவ்வப்போது தனது யாக்கர் பந்துகளை வீசி வந்தார்.இதனால் பும்ராவுக்கு டி20 உலக கோப்பை முன்பு போட்டிகள் விளையாடினால் மேட்ச் பிராக்டிஸ் கிடைத்துவிடும் என்று ரசிகர்களும் நம்பினர்.

மீண்டும் இல்லை

மீண்டும் இல்லை

இந்த நிலையில் பும்ரா முதல் டி20 போட்டியில் ஏன் விளையாடவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து ரவி சாஸ்திரி கேள்வி கேட்டதற்கு ரோகித் சர்மா மழுப்பலாக பதில் அளித்தார். இன்று காலையில் பும்ராவுக்கு முதுகு வலி இருந்ததால் அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை என்று பதிலளித்தார். டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பு இந்தியா விளையாடும் கடைசி டி20 தொடர் இது.

ரசிகர்கள் சந்தேகம்

ரசிகர்கள் சந்தேகம்

இதனால் பும்ரா இந்த தொடரில் பழைய ஃபார்மை மீட்பாரா என ரசிகர்கள் நம்பினர். ஆனால் அவர் தற்போது முழு உடல் தகுதியுடன் இருக்கிறார்களா என்பதை சந்தேகமாகியுள்ளது. இன்றைய ஆட்டத்தில் ஹர்சல் பட்டேல், ஆர்ஸ்தீப் சிங் மற்றும் தீபக் சாஹர் என மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே தென்னாப்பிரிக்காவை கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஏன் மாற்றம்

ஏன் மாற்றம்

இதேபோன்று தமிழக வீரர் அஸ்வின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சாகல் நன்றாக பந்து வீசிய நிலையில் அவருக்கு ஏன் ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது என்ற குழப்பமும் எழுந்துள்ளது. வீரர்களைத் தொடர்ந்து இப்படி மாற்றி மாற்றி அணியில் சேர்ப்பதும் நீக்குவதுமாக இருந்தால் அவர்களால் எப்படி சரியாக செயல்பட முடியும் என்ற விமர்சனத்தையும் ரசிகர்கள் முன் வைக்கின்றனர்.

Story first published: Wednesday, September 28, 2022, 20:10 [IST]
Other articles published on Sep 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+