பிடிவாதத்தால் வந்த விணை.. ஜஸ்பிரித் பும்ரா குணமடையாமல் இருக்க இதுதான் உண்மை காரணமா.. ரசிகர்கள் ஷாக்!
மும்பை: ஜஸ்பிரித் பும்ரா பல மாதங்களாக காயம் எனக்கூறி ஓய்வு பெற்று வந்தாலும், அவருக்கு ஏன் இன்னும் குணமாகவில்லை என்ற காரணம் வெளியாகியுள்ளது. அவரின் பிடிவாதமே எமனாக வந்து நின்றுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி நடந்து வருகிறது. 2 போட்டிகள் முடிந்துவிட்ட சூழலில் கடைசி 2 போட்டிகள் நாளை முதல் தொடங்குகிறது.
இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா பங்குபெறாமல் ஏமாற்றியுள்ளார். காயத்தின் தன்மை இன்னும் குறையாததால் அவர் இந்த தொடரில் இடம்பெறவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பும்ராவின் காயம்
முதுகில் ஏற்பட்ட உள்காயம் காரணமாக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற பும்ரா ஆசிய கோப்பை தொடர், டி20 உலகக்கோப்பை தொடர் என தொடர்ச்சியாக தவறவிட்டு வருகிறார். ஆஸ்திரேலிய தொடரிலும் இடம்பெறாத அவர் மார்ச் 31ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடருக்காவது வந்துவிடுவார் என்று எதிர்பார்த்த சூழலில் அதுவும் நடக்காது என தெரிவித்துள்ளனர்.

புது பிரச்சினை
பும்ராவின் பிரச்சினை தீர்வதற்கு மேலும் சில காலம் ஆகும் என்பதால் அடுத்ததாக வரவுள்ள ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாட வாய்ப்புகள் குறைவு எனக்கூறப்படுகிறது. இதே போல ஜூன் மாதம் தொடங்கவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் எனக்கூறுகின்றனர்.

பும்ரா பிடிவாதம்
இந்நிலையில் இத்தனை நாட்களாக குணமடையாமல் இருப்பதற்கு பும்ராவின் பிடிவாதம் தான் காரணம் எனத்தெரியவந்துள்ளது. பும்ராவின் காயத்தை பார்த்த பயிற்சியாளர்களும், மருத்துவர்களும் தொடக்கத்திலேயே அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளுங்கள், அப்போது தான் காயம் முழுவதுமாக சரியாகும் எனக்கூறியுள்ளனர். ஆனால் அதனை பும்ரா ஏற்கவே இல்லையாம்.

பிசிசிஐ-ன் முடிவு
அறுவை சிகிச்சை செய்துக்கொண்டால் அதில் இருந்து குணமடைவதற்கு 4 - 5 மாதங்கள் வரை ஆகும் என்பதால், அதனை செய்துக்கொள்ள மறுத்ததாக தெரிகிறது. அதன் விளைவாக தான் எத்தனை முறை பயிற்சி பெற்று தயாரானாலும் காயம் ஏற்பட்டுவிடுகிறது. எனவே இந்த முறை கண்டிப்பாக செய்துக்கொண்டே தீர வேண்டும் என பிசிசிஐ கூறியுள்ளது. இதனால் இனி நேரடியாக உலகக்கோப்பைக்கு தான் தயாராவார் எனத்தெரிகிறது.


Click it and Unblock the Notifications