IPL Flood Light - மொஹாலியில் மட்டும் ஏன் இவ்வளவு லைட்கள்.. அதுவும் உயரம் குறைவாக இருக்கு தெரியுமா?
மொஹாலி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப், கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான 2வது லீக் ஆட்டம் மொஹாலியில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் போது திடீரென்று மின் விளக்குகள் அணைந்ததால், கொல்கத்தாவின் இன்னிங்ஸ் தாமதமாக தொடங்கியது.
இது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரம் கோடி ரூபாய் ஐபிஎல் மூலம் பிசிசிஐக்கு வருமானம் கிடைக்கிறது. ஆனால் மைதானத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மோசமாக இருப்பதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இந்த நிலையில், கிரிக்கெட் மைதானத்தில் இரவை பகல் போல் மாற்றும் மின் விளக்குகள் அனைத்தும் மிகவும் உயரமாக இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அதுவும் குறைந்தபட்சம் 4 உயர் மின் விளக்குகள் இருக்கும். ஆனால் பஞ்சாப் மொலியில் மட்டும் ஏன் உயரம் குறைவாக இத்தனை மின் விளக்குகள் இருக்கிறது தெரியும்?
இதற்கு காரணம், மொஹாலி கிரிக்கெட் மைதானம் அருகில் விமான நிலையம் இருக்கிறது. விமான நிலையம் அருகில் இருக்கும் போது, அது அருகில் உயர் மின் விளக்குகள் இருக்க கூடாது. அது விமானம் தரையிரங்குவதில் பிரச்சினை ஏற்படும். இதன் காரணமாக தான் பஞ்சாப்பில் மட்டும் உயரம் குறைவாக மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் கூடுதல் தகவலாக இந்தியாவில் 1984 ஆம் ஆண்டு தான் உயர் மின் விளக்குகளில் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications