Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உண்மையில் நடந்தது இதுதான்.. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நடராஜனுக்கு வாய்ப்பில்லை.. என்ன காரணம்?

சிட்னி: இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர் நடராஜன் சேர்க்கப்படாதது ஏன் என்று கேள்விகள் எழுந்துள்ளது. இதற்கான உண்மையான காரணம் என்ன என்ற விவரம் வெளியாகி உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது முடிந்துள்ளது. 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி தக்க வைத்துள்ளது.

இந்த நிலையில் இந்தியா அடுத்தகட்டமாக இங்கிலாந்தை அடுத்த மாதம் எதிர்கொள்ள உள்ளது. டெஸ்ட், ஒருநாள், டி 20 என்று மிக நீண்ட தொடர் இங்கிலாந்து - இந்தியா இடையே இந்தியாவில் நடக்க உள்ளது.

அணி

அணி

இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம் நேற்று வெளியானது. அதன்படி விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, பாண்ட், சாகா, பாண்டியா, கே. எல் ராகுல், பும்ரா, இஷாந்த் சர்மா, சிராஜ், ஷரத்துல் தாக்கூர், அஸ்வின், குல்தீப், வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எப்படி

எப்படி

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறவில்லை. இவர் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 3 விக்கெட் எடுத்தார். டெஸ்ட் போட்டியில் நன்றாக பவுலிங் செய்தாலும் இவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை .

காரணம்

காரணம்

இந்த நிலையில் இவர் டெஸ்ட் போட்டியில் எடுக்கப்படாதது ஏன் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்பின் நடராஜன், சுயமாக லீவ் எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்திய அணியில் இவர் இணைந்த போதுதான் இவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால் இந்தியாவிற்காக ஆட வேண்டும் என்பதால் இவர் தனது குழந்தையை பார்க்கவில்லை.

பாண்டியா

பாண்டியா

மாறாக பாண்டியா, கோலி போன்ற மூத்த வீரர்கள் தங்கள் குழந்தையை பார்ப்பதற்காக இந்தியா வந்தனர். நடராஜன் அறிமுக வீரர் என்பதால் வாய்ப்பை தக்க வைக்க ஆஸ்திரேலியாவிலேயே தங்கிவிட்டார். இந்த நிலையில்தான் குழந்தையை பார்ப்பதற்காக நடராஜன் பேட்டர்னிட்டி லீவ் எடுக்க உள்ளார் .

முதல் இரண்டு டெஸ்ட்

முதல் இரண்டு டெஸ்ட்

இதனால் இவர் டெஸ்ட் போட்டியில் இடம்பெறவில்லை. அதேபோல் இவருக்கு டெஸ்ட் போட்டிகளில் இப்போது வாய்ப்பு கிடைக்காது. பெரும்பாலும் நடராஜன் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக ஆடுவார் என்று கூறப்படுகிறது. மற்றபடி இந்திய அணியில் நடராஜன் எந்த விதமான புறக்கணிப்பையும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, January 20, 2021, 9:33 [IST]
Other articles published on Jan 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+