24 மணி நேரத்தில் மாறிவிட்டது.. கோலிக்கு எதிராக பேசினால்.. மும்பை அணியில் ஸ்பெஷல் பொறுப்பா? - பகீர்
டெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரர் பர்தீவ் பட்டேல் கேப்டன் கோலிக்கு எதிராக பேசிய நிலையில் அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் பெங்களூர் அணியில் பதவி கேட்டதாகவும், அதை பெங்களூர் அணி நிர்வாகம் கொடுக்கவில்லை என்றும் கூறுகிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பர்தீவ் பட்டேல் நேற்று ஓய்வு பெற்றார். அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக பர்தீவ் பட்டேல் அறிவித்துள்ளார்.
இவர் ஓய்வு பெற்ற 24 மணி நேரத்தில் தனது ஆர்சிபி அணியின் கேப்டன் கோலிக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

என்ன சொன்னார்
ரோஹித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று பர்தீவ் பட்டேல் குறிப்பிட்டு இருந்தார். ரோஹித் சர்மா மிகவும் சிறந்த கேப்டன். ஒரு அணியை எப்படி உருவாக்க வேண்டும் என்று அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவருக்கு கேப்டன்சியை கொடுக்க வேண்டும். அவர் கேப்டன் ஆவதில் எந்த தவறும் இல்லை

கோலி
டி 20 உலகக் கோப்பைக்கு முன்பாக ரோஹித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக போட வேண்டும். அப்போதுதான் இந்திய அணிக்கு பலன் அளிக்கும் என்று பர்தீவ் பட்டேல் கூறியுள்ளார். கோலியின் கேப்டன்சியை பறிக்கும் வகையில் பர்தீவ் இப்படி பேசி இருந்தார்.

என்ன நடந்தது
இந்த நிலையில் பர்தீவ் பட்டேல் இப்படி பேசி சில மணி நேரங்களில் மும்பை அணியில் இவருக்கு ஸ்பெஷல் பொறுப்பு வழங்கப்பட்டது. ரோஹித்திற்கு ஆதரவாகவும், கோலிக்கு எதிராகவும் பர்தீவ் பட்டேல் பேசிய சில மணி நேரங்களில் மும்பை அணியில் திறமை கண்டுபிடிப்பு குழுவில் பர்தீவ் பட்டேல் சேர்க்கப்பட்டார்.

ஏன் இப்படி
பெங்களூர் அணியில் இவர் பதவி கேட்டு இருக்கிறார். அணிக்குள் நிர்வாக ரீதியான பதவியை பர்தீவ் பட்டேல் கேட்டுள்ளார். ஆனால் இவருக்கு பதவி வழங்க மும்பை அணி நிர்வாகம் மறுத்துவிட்டது.

மறுப்பு
இதை அடுத்தே பர்தீவ் பட்டேலுக்கு மும்பை அணி நிர்வாகம் பதவி வழங்கி உள்ளது. சில ஐபிஎல் சீசன்களில் மும்பை அணியில் பர்தீவ் பட்டேல் விளையாடி இருக்கிறார். அந்த உறவை பயன்படுத்தி தற்போது மும்பை அணியில் நிர்வாக ரீதியான பணியில் பர்தீவ் பட்டேல் இணைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications