Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்லில் ஏற்பட்ட சம்பவம்.. பகையை மனதில் வைத்து.. கோலியை சீண்டும் பர்தீவ் பட்டேல்.. என்ன நடந்தது?

டெல்லி: இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலிக்கு எதிராக பர்தீவ் பட்டேல் திடீரென பேசி இருப்பது ஏன் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பர்தீவ் பட்டேல் நேற்று ஓய்வு பெற்றார். அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக பர்தீவ் பட்டேல் அறிவித்துள்ளார்.

ஐபிஎல் உள்ளிட்ட போட்டிகளில் இருந்தும் பர்தீவ் பட்டேல் ஓய்வு பெற்றுள்ளார்.இந்த நிலையில்தான் அவர் கோலிக்கு எதிராக பேசி உள்ளார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

பர்தீவ் பட்டேல் அளித்த பேட்டியில், ரோஹித் சர்மா மிகவும் சிறந்த கேப்டன். ஒரு அணியை எப்படி உருவாக்க வேண்டும் என்று அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவருக்கு கேப்டன்சியை கொடுக்க வேண்டும். அவர் கேப்டன் ஆவதில் எந்த தவறும் இல்லை

கேப்டன்

கேப்டன்

அவர் டி 20 அணியின் கேப்டனாக இருந்தால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். டி 20 உலகக் கோப்பைக்கு முன்பாக ரோஹித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக போட வேண்டும். அப்போதுதான் இந்திய அணிக்கு பலன் அளிக்கும் என்று பர்தீவ் பட்டேல் கூறியுள்ளார்.

கோலி

கோலி

கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பர்தீவ் பட்டேல் இப்படி பேசி உள்ளார். ஐபிஎல் தொடரின் போது கோலி - பர்தீவ் பட்டேல் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம்தான் இதற்கு காரணம் என்கிறார்கள். அதன்படி பர்தீவ் பட்டேலுக்கு கோலி ஐபிஎல் தொடரின் போது வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

வாய்ப்பு

வாய்ப்பு

பர்தீவ் பட்டேல் வாய்ப்பு கேட்டும் கோலி வாய்ப்பு கொடுக்கவில்லை. படிக்கலை அணியில் அறிமுகப்படுத்தினார். அதன்பின் மொத்தமாக பர்தீவ் பட்டேலை கோலி கண்டுகொள்ளவே இல்லை என்று கூறப்படுகிறது. அணிக்குள் பர்தீவ் பட்டேலுக்கு கோலி மரியாதை கொடுக்கவில்லை என்றும் கூறுகிறார்கள்.

சிக்கல்

சிக்கல்

ஆனால் பர்தீவ் பட்டேல் மும்பை அணியில் இருந்த போது ரோஹித் சர்மா அவருக்கு முறையான வாய்ப்பு கொடுத்தார். பல போட்டிகளில் பேட்டிங் இறக்கினார். கோலி இந்த மரியாதையை தனக்கு கொடுக்கவில்லை என்ற கோபத்தில் பர்தீவ் பட்டேல் இருந்துள்ளார். இதனால்தான் தற்போது கோலிக்கு எதிராக பர்தீவ் பட்டேல் பேசி இருக்கிறார் என்கிறார்கள்.

Story first published: Thursday, December 10, 2020, 18:08 [IST]
Other articles published on Dec 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+