For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோஹித்துக்கு டெஸ்ட் அணியில் இடம் இல்லையா? கொந்தளிக்கும் ஹர்பஜன்.. கங்குலி ஆறுதல்

மும்பை : வெஸ்ட் இண்டீஸ் உடனான டெஸ்ட் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரோஹித் சர்மா பெயர் இடம் பெறவில்லை.

அவர் நீண்ட நாட்கள் முன்பு ஆடிய டெஸ்ட் தொடரில் சரியாக ரன் குவிக்கவில்லை என காரணம் காட்டி அடுத்து வந்த டெஸ்ட் தொடர்களில் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை.

தற்போது ஒருநாள் போட்டிகளில் உச்சகட்ட பார்மில் இருக்கிறார் ரோஹித் சர்மா. ஒருநாள் தரவரிசையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இப்போதும் அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் அளிக்கவில்லை.

அதிர்ச்சி அடைந்த ஹர்பஜன்

இதனால், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங், கங்குலி முதல் ரசிகர்கள் வரை ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். ஹர்பஜன் தன் ட்வீட்டில், "ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் இல்லை. தேர்வாளர்கள் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்? யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்கள். இதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை" என கோபப்பட்டுள்ளார்.

ஆறுதல் சொல்லும் கங்குலி

கங்குலி தன் ட்வீட்டில், "சிறப்பான வெற்றி.. ரோஹித் மற்றும் அணிக்கு.. ரோஹித் நீங்கள் சிறப்பாக செயல்பட்டீர்கள். உங்கள் பெயரை டெஸ்ட் அணியில் பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் இதை பார்த்து ஆச்சரியப்படுகிறேன். அது நீண்ட தூரம் இல்லை" என கூறியுள்ளார்.

அவங்களும் மட்டும் வாய்ப்பா?

"தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடரில் ரோஹித் போன்று எல்லோருமே சரியாக ஆடவில்லை. ஆனால், அவர்களில் ராகுல், புஜாரா, ரஹானே ஆகியோருக்கு இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைத்ததே" என சுட்டிக் காட்டியுள்ளார் இந்த ரசிகர்

அரசியலை நுழைக்காதீர்கள்

"இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஏன் ரோஹித்துக்கு இடம் அளிக்கவில்லை? கிரிக்கெட்டில் அரசியலை நுழைக்காதீர்கள். இது விளையாட்டல்ல.. இது உணர்ச்சிப்பூர்வமானது. ஏன் அவரை விட்டு விட்டீர்கள் என பதில் சொல்ல வேண்டும்.. அவர் தன் வேலையை சரியாக செய்யவில்லையா? ஆசிய கோப்பையில் ரன் குவிக்கவில்லையா?" என கேள்விகளால் சரமாரியாக தாக்கியுள்ளார் இந்த ரசிகர்.

Story first published: Monday, October 1, 2018, 14:23 [IST]
Other articles published on Oct 1, 2018
English summary
Why Rohit Sharma not added in Tests squad? Asks Harbhajan, Ganguly and fans in twitter
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X