For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுக்கு முன்னாடி ரோஹித் சர்மாவை ஏன் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கினீங்க? சேவாக் விளாசல்

Recommended Video

சேவாக் சொன்னா அதுல ஒரு காரணம் இருக்கும்!

மும்பை : இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டு வந்தார். ரோஹித் ஒரு வருட போராட்டத்துக்குப் பின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களில் வெறும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு பெற்றார் ரோஹித்.

ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சாளர்களை அடித்து துவைக்கும் ரோஹித் சர்மா, டெஸ்ட் அணியில் நீண்ட காலமாக இடம் பெறாதது ஆச்சரியம் அளிப்பதாக சேவாக் கூறியுள்ளார்.

ரோஹித்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது

ரோஹித்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது

ரோஹித் சர்மா கடைசியாக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்டில் இந்த ஆண்டு துவக்கத்தில் இடம் பிடித்தார். அந்த தொடரில் ரோஹித் ரன் குவிக்கவில்லை என்ற காரணத்தால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம் மறுக்கப்பட்டது. மீண்டும், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கும் இடம் கிடைக்கவில்லை.

ஏன் ரோஹித் சர்மாவை மட்டும் நீக்க வேண்டும்?

ஏன் ரோஹித் சர்மாவை மட்டும் நீக்க வேண்டும்?

இந்த நிலையில் தான் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இடம் பிடித்துள்ளார். சேவாக் இது பற்றி கூறுகையில், "இலங்கை அணிக்கு எதிராக ஒரு சதம், ஒரு அரைசதம் அடித்தார் ரோஹித். பின் தென்னாபிரிக்காவில் சரியாக ஆடவில்லை. அதோடு அவரை ஏறக்கட்டி விட்டார்கள். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. எத்தனை பேட்ஸ்மேன் தென்னாபிரிக்காவில் ரன் குவித்துள்ளார்கள்? ஏன் ரோஹித் சர்மாவை மட்டும் நீக்க வேண்டும்?" என நெத்தியடி கேள்வி கேட்டுள்ளார் சேவாக்.

எல்லாம் தலைகீழாக நடக்கிறது

எல்லாம் தலைகீழாக நடக்கிறது

மேலும், "தேர்வாளர்கள் இதற்கு பதில் கூற வேண்டும். ரோஹித்தை ஏன் நீக்கினீர்கள்? ஒருநாள் போட்டிகளில் அவர் மூன்று இரட்டை சதம் அடித்துள்ளார். டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காத அளவு அப்படி என்ன மோசமாக ஆடிவிட்டார்? உலகத்தில் ஒருநாள் போட்டியில் ரன் குவித்து விட்டு டெஸ்ட் அணியில் ஆடாமல் இருக்கும் ஒருவரை பார்க்க முடியுமா? இங்கே எல்லாம் தலைகீழாக நடக்கிறது" என விளாசினார் சேவாக்.

சேவாக் கேட்பது நியாயமான கேள்வி

சேவாக் கேட்பது நியாயமான கேள்வி

சேவாக் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் நியாயமான கேள்வியே. ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் உச்சகட்ட பார்மில் இருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளில், அவருக்கு ஏன் சரியான டெஸ்ட் வாய்ப்புகள் கிடைக்கவில்லை? யாரவது கூறினால் நன்றாக இருக்கும்.

Story first published: Monday, November 12, 2018, 19:14 [IST]
Other articles published on Nov 12, 2018
English summary
Why Rohit Sharma was dropped from Test team, Sehwag asks Indian team selectors
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+