Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் கடவுள் சச்சினுக்கு இன்று பிறந்தநாள்... அவரை திக்குமுக்காட வைத்த டெஸ்ட் எது தெரியுமா?

Recommended Video

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சச்சினை திக்குமுக்காட வைத்த டெஸ்ட் எது தெரியுமா!?

டெல்லி: கிரி்க்கெட் என்பது ஒரு மதமாக இருந்தால், அதன் கடவுள் சச்சின் டெண்டுல்கர்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. இன்று பிறந்தநாள் காணும் சச்சின் டெண்டுல்கரை, திக்கமுக்காட வைத்த ஒரு போட்டி நிகழ்ந்தது. அது அவர் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடியதுதான்.

இந்திய கிரிக்கெட் பல வீரர்களை பார்த்துள்ளது. பெயரைக் குறிப்பிட்டால், அதில் சிலரை நமக்கே தெரியாமல் விட்டுவிடும் வாய்ப்பும் உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் இந்திய அணிக்காக தங்களுடைய பங்களிப்பை அளித்துள்ளனர், அளித்தும் வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் வரலாறு என்று இப்போது எடுத்துக் கொண்டாலும், அதில் முதலில் நமது கண்முன்பே வருவது சச்சின் டெண்டுல்கர்.

சச்சின் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணிக்காக விளையாடியதுடன், கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகள் தன்னுடைய பெயரில் பதிவு செய்துள்ளார். அது பற்றி எழுதினால், பல ஆயிரம் பக்கங்களுக்கு மேல் போகும்.

முறியடிப்பது சுலபமல்ல

முறியடிப்பது சுலபமல்ல

200 டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்கள், 463 ஒருதினப் போட்டிகளில் 18,426 ரன்கள், சர்வதேசப் போட்டிகளில் 100 சதங்கள், இந்த சாதனைகளை இன்றைய சூழ்நிலையில் முறியடிப்பது என்பது மிகவும் சாதாரணமாக விஷயமில்லை.

இது சாத்தியமில்லை

இது சாத்தியமில்லை

சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனைகளைப் புரிவதற்கு எவ்வளவு தடைகளை, இடர்ப்பாடுகளை தாண்டி வந்துள்ளார் என்பது, அவருடைய 30 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றை முழுவதும் படித்தால் மட்டுமே புரியும்.

சச்சினுக்கு சோதனை

சச்சினுக்கு சோதனை

இந்திய அணிக்காக ஒரே ஒரு டி-20 போட்டியில் மட்டுமே பங்கேற்ற சச்சின், ஒருதினப் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். கடைசியாக, தன்னுடைய 200வது டெஸ்ட் போட்டியில், சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்தார். அதில்தான் அவருக்கு கடுமையான சோதனை ஏற்பட்டது.

தாய்க்கு பெருமை கிடைத்து

தாய்க்கு பெருமை கிடைத்து

1989 நவம்பர் 15ல் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கிய சச்சின், 2013 நவம்பர் 14ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடைசியாக களமிறங்கினார். இதுவரை தான் விளையாடிய கிரிக்கெட் போட்டிகள் ஒன்றையும் நேரில் பார்த்திராத தனது அம்மாவை, மும்பையில் நடந்த அந்தப் போட்டிக்கு அழைத்து வந்தார் சச்சின்.

சச்சினுக்கு சோதனை

சச்சினுக்கு சோதனை

இத்தனை ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய சச்சினுக்கு அந்தப் போட்டியில்தான் மிகப் பெரிய சோதனை நேர்ந்தது. முதல் நாள் இறுதியில் இந்தியா பேட்டிங் செய்கிறது. சச்சின் களமிறங்கினார். மைதானத்தில் உள்ள பெரிய ஸ்கீரினில் சச்சினின் தாய், போட்டியைப் பார்க்கும் காட்சி வெளியானது. அதைத் தொடர்ந்து மனைவி அஞ்சலி என, தனக்கு நெருக்கமானவர்கள் படங்கள் அந்த ஸ்கீரினில் காட்டப்படுகிறது.

கிரிக்கெட் கடவுள்

கிரிக்கெட் கடவுள்

முதல் முறையாக தன்னுடைய ஆட்டத்தை நேரில் பார்க்க வந்துள்ள தாயின் முகத்தை மிகப் பெரிய ஸ்கீரினில் பார்த்த சச்சின் உணர்ச்சி வசப்ப்டடுள்ளார். மனைவி என நெருக்கமானவர்கள் முகங்கள் காட்டப்படுகின்றன. ஆனால், எதுவும் தன்னுடைய ஆட்டத்தை பாதிக்காமல் பார்த்துக் கொண்ட கிரிக்கெட் கடவுள், அந்தப் போட்டியில் 74 ரன்கள் எடுத்தார். இந்தியா அந்தப் போட்டியில் வென்றது.

தாயா! தாய் நாடா!

தாயா! தாய் நாடா!

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் அந்தப் போட்டி குறித்து சச்சின் குறிப்பிட்டார். என்னுடைய கடைசி டெஸ்ட். ஆனால், அதுதான் என்னுடைய தாய் மைதானத்தில் நேரடியாக பார்க்கும் முதல் போட்டி. மிகவும் இக்கட்டான, உணர்ச்சிபூர்வமான நிலையில் இருந்தேன். இத்தனை ஆண்டுகள் தாய்நாட்டுக்காக விளையாடிய நான், கடைசி போட்டியிலும் தாய்நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று உறுதி எடுத்தேன். அதில் வெற்றியும் பெற்றேன். ஆனால், மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் அந்தப் போட்டியில் இருந்தேன் என்று சச்சின் கூறியுள்ளார்.

சச்சினை கிரிக்கெட் கடவுள் என்று கூறுவதற்கு இதைவிட மிகச் சிறந்த உதாரணம் வேறு எதுவும் தேவையில்லை. இன்று பிறந்த நாள் காணும் அவரை வாழ்த்துவதில் நாம் பெருமை அடைவோம்.

Story first published: Tuesday, April 24, 2018, 7:07 [IST]
Other articles published on Apr 24, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+