சென்னை: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பைனலில் இந்திய பவுலர்கள் செய்த விஷயம் ஒன்று கடுமையான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பிய நிலையில் தற்போது பவுலிங்கிலும் சொதப்பி வருகிறது . தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா வேகமாக ஆடினாலும் இன்னொரு பக்கம் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கில் அவுட் ஆனார்.

அதேபோல் வேகமாக பவுண்டரி சிக்ஸ் என்று ஆடிக்கொண்டு இருந்த ரோஹித் சர்மா 31 பந்தில் 3 சிக்ஸ் அடித்தார். 4 பவுண்டரி அடித்தார் . 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் தேவையின்றி கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அவரை தொடர்ந்து இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் வெறும் 4 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடந்த 4 போட்டிகளில் 2 அரைசதம், 2 சதம் அடித்தார். ஆனால் இன்று முக்கியமான கட்டத்தில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் அவுட்டாகி உள்ளார். அதன்பின் கோலி நிதானமாக 63 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். கே எல் ராகுல் 107 பந்தில் 66 ரன்கள் எடுத்தார்.
இடையில் ஜடேஜாவும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அதன்பின் பும்ராவும் வெறும் 1 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இதனால் இந்தியாவை விட்டு மேட்ச் கொஞ்சம் கொஞ்சமாக சென்று கொண்டு இருக்கிறது . இன்று ஆஸ்திரேலிய மெயின் பவுலர்கள் எல்லோருமே கிட்டதட்ட விக்கெட் எடுத்தனர். இதனால் 50 ஓவருக்கு 240 ரன்கள் எடுத்து இந்தியா ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தும் கூட இந்திய அணி தற்போது மோசமாக திணறிக்கொண்டு உள்ளது.
ஆஸ்திரேலியா பவுலிங்: முக்கியமாக இரண்டாவது ஓவரிலேயே ஷமி வார்னர் விக்கெட்டை எடுத்தார். இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே வார்னர் விக்கெட்டை ஷமி எடுத்தார்.
அடுத்து பும்ரா பந்தில் மிட்சல் மார்ஷ் அவுட் ஆனார். ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பின் ஸ்மித் மட்டும் பொறுமையாக ஆடிக்கொண்டு இருந்தார். ஆனால் அவருடைய விக்கெட்டையும் பும்ரா எடுத்தார். எல்பிடபிள் முறையில் ஸ்மித் அவுட் ஆனார். ஆனால் இதில் கவனிக்க வேண்டியது.. ஸ்மித் அதற்கு ரிவ்யூ எடுக்கவில்லை. அவர் விக்கெட் இல்லை என்றாலும் இன்று ரிவ்யூ எடுக்கவில்லை.
பார்ட்னர்ஷிப்; இதை தொடர்ந்து மேட்சில் தொடர்ந்து ஹெட் மற்றும் லபுசேன் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி வருகின்றனர். இரண்டு பேரும் 100 ரன்களை எடுத்து உள்ளனர். இதில் ஆஸ்திரேலியா 174 ரன்களை 3 விக்கெட் இழப்பிற்கு எடுத்து ஆடி வருகிறது.
தவறு செய்யும் அணி: இந்த நிலையில்தான் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பைனலில் இந்திய பவுலர்கள் செய்த விஷயம் ஒன்று கடுமையான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி பவுலர்கள் பலரும் லைன், லென்த் கூட தவறாக போட்டு வருகின்றனர்.
பிரஷர் காரணமாக.. லைன், லென்த் இரண்டிலும் வீரர்கள் சொதப்பி தொடங்கி உள்ளனர். முக்கியமாக சிராஜ், பும்ரா, குல்தீப் கூட லைன் மற்றும் லென்த் இரண்டிலும் தவறு செய்ய தொடங்கி உள்ளனர். அவர்களின் இந்த சொதப்பல் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.