Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்லில் மும்பையிடம் மட்டுமே ஏன் தோற்கிறது தோனி அணி..? நாளைய போட்டியில் பழி தீர்க்குமா?

விசாகப்பட்டினம்:ஐபிஎல் தொடரில் மும்பையிடம் தான் சென்னை அணி பல முறை தோற்றிருக்கிறது. அது இந்த ஐபிஎல் தொடரிலும் நடந்திருக்கிறது. கடந்த கால ஐபிஎல் போட்டிகளிலும் நடைபெற்றிருக்கிறது.

சென்னை அணியின் தோல்விகளிலேயே மும்பையிடம் வாங்கிய அடி தான் ஜீரணிக்க முடியாத ஒன்று கூறலாம். அதற்கு சமீபத்திய உதாரணம்... நடப்பு ஐபிஎல் தொடரில் கூட, முக்கியமான பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியில் மும்பையிடம் தோற்று போயிருக்கிறது சென்னை.

இன்னும் சொல்லப்போனால் நடப்பு தொடரிலேயே 3 முறை மும்பை இந்தியன்சிடம், சென்னை தோல்வி அடைந்திருக்கிறது. அதற்கு பதிலடியாக நாளைய பைனல் இருக்கும் என்று சென்னை ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஏன் என்றால்... இந்த இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி.. இந்தியா, பாகிஸ்தான் போட்டியை போன்றது என்று தமிழ்ப்புலவர் ஹர்பஜன் வேறு கூறியிருக்கிறார்.

3 முறை தோல்வி

3 முறை தோல்வி

அந்த அளவுக்கு இரு அணிகளுக்கும் இடையேயான பின்னணி இருக்கிறது. இத்தனைக்கும் மும்பை அணிக்காக பல காலம் ஐபிஎல் தொடரில் விளையாடியவர் தான் ஹர்பஜன் சிங். ஆனால்... இந்த தொடரிலேயே 3 முறை மும்பையிடம் மண்ணை கவ்வியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

வெற்றி விகிதம் அதிகம்

வெற்றி விகிதம் அதிகம்

அதுதவிர மற்றொரு புள்ளி விவரமும் இருக்கிறது. அதாவது சென்னைக்கு எதிராக அதிகளவு வெற்றி சதவீதம் பெற்றிருக்கிருக்கும் ஒரே அணி என்று கூறினால் அது மும்பை அணி மட்டுமே. அதுபோல சென்னையும் அதிக முறை தோல்வியை தந்திருப்பது மும்பை அணிக்கு எதிரான போட்டிகளில் தான்.

பரம வைரியான போட்டிகள்

பரம வைரியான போட்டிகள்

ஏன்.. மும்பைக்கும், சென்னைக்கும் இடையேயான போட்டியானது பரம வைரியான போட்டியாக பார்க்கப்படுகிறது. இதற்கு கிரிக்கெட் உலகின் கடந்த கால சம்பவங்களை நினைத்து பார்த்தால் புலப்படும். கிரிக்கெட் உலகை பொறுத்த வரை அதன் பிறப்பிடம் என்று அறியப்படுவது மும்பை.

தோனியின் சாதனை

தோனியின் சாதனை

மும்பை தெருக்களில், ஏன் வீதிக்கு வீதி இன்றும் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரே விளையாட்டு தான். அங்கிருந்த வந்த மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினால் இந்தியாவுக்கு உலக கோப்பையை பெற்று தரமுடியவில்லை. ஆனால்... ராஞ்சியில் இருந்து இதுவரை எந்த பிளேயரும் இந்திய அணியில் சோபிக்காத நிலையில் இந்தியாவுக்கு உலக கோப்பையை பெற்று தந்தவர் தோனி.

2008 முதல் ஐபிஎல்

2008 முதல் ஐபிஎல்

அதற்கு முன்னரே கூட, சரியாக சொல்ல வேண்டும் என்றால், 2007ம் ஆண்டு டி 20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தானை இறுதிப்போட்டியில் வென்று இந்தியா கோப்பையை கைப்பற்றியது (அதற்கு அடுத்தாண்டு முதல் தான்.. அதாவது 2008ல் ஐபிஎல் தொடர் உருவானது. அதுவரை மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின், தாதா கங்குலி என்ற பிம்பம் லேசாக மாறி தோனி என்ற பெயர் பிரபலமாக ஆரம்பித்தது.

முதல் முறை சாம்பியன்

முதல் முறை சாம்பியன்

அது மட்டுமல்லாமல், அப்போது மும்பைக்கு சச்சினும், சென்னைக்கு தோனியும் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தினர். முதல் இரண்டு சீசனில் மும்பை, அரையிறுதிக்கு கூட போக வில்லை. 2010ம் ஆண்டு இறுதிப்போட்டியில் மும்பையை வீழ்த்தி முதல் முறையாக ஐபிஎல் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. அதற்கு பதிலடியாக 2013, 2015ம் ஆண்டுகளில் சென்னையை வீழ்த்தி கோப்பையை வென்றது மும்பை.

2 ஆளுமைகள்

2 ஆளுமைகள்

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்றதும் இந்த இரு அணிகளும் தான். இது போன்ற கடந்த கால வரலாறுகளில் ஆதிக்கம் நிறைந்த இரு ஆளுமைகள் (சச்சின், தோனி) களம் கண்ட போட்டிகள், வெற்றிகள், தோல்விகள் என இருந்திருக்கின்றன.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

அதிலும் 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் தொடர் இறுதிப்போட்டிகளில் மும்பையிடம் வீழ்ந்திருக்கிறது சென்னை. நிகழ்கால ஐபிஎல் தொடரிலும் மும்பையிடம் சென்னை அடி வாங்கியிருக்கிறது. எனவே இந்த இறுதிப் போட்டி ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Story first published: Saturday, May 11, 2019, 15:30 [IST]
Other articles published on May 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+