எனக்கு அந்த ஹிஸ்டரி தெரியுங்க..! அதனால் தான் இப்படி முடிவு எடுத்தேன்..! கோலி சொன்ன சீக்ரெட்..!
போர்ட் ஆப் ஸ்பெயின்: பிட்ச் போகப்போக ஸ்லோவாகிவிடும், அதன் தன்மையை கருத்தில் கொண்டு தான் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக பேட்டிங் எடுத்துள்ளோம் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது. முதல் போட்டி மழையால் ரத்தானது. எனவே இந்த தொடரை வெல்ல வேண்டுமானால் மற்ற 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.
எனவே, இந்த போட்டி இரு அணிகளுக்குமே முக்கிய போட்டி. தீர வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கின. போட்டியில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் போட்டியில் களமிறங்கிய அதே வீரர்களுடன் தான் இந்திய அணி களமிறங்கியது.

அணி விவரம்
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் விவரம்: கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ், ஷாய் ஹோப் , நிக்கோலஸ் பூரன், சிம்ரான் ஹெட்மியர், ரோஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர் , கார்லோஸ் பிராத்வைட், கெமர் ரோச், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ்.

11 பேர் விவரம்
இந்திய அணி வீரர்கள் விவரம்: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி , ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், முகமது ஷமி, கே கலீல் அகமது.

பேட்டிங் தேர்வு
டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 3 டி 20, முதல் ஒருநாள் போட்டி என அனைத்திலுமே டாஸ் வென்ற கேப்டன் கோலி, இந்த போட்டியிலும் டாஸ் வென்றார்.

இதுதான் காரணம்
டாஸ் வென்ற கோலி பேட்டிங்கை தேர்வு செய்ததற்கான காரணத்தை கூறி இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: இந்த பிட்ச் போகப்போக ஸ்லோவாகி விடும். அது தான் கடந்த கால வரலாறு சொல்கிறது. 2வது இன்னிங்ஸில் பிட்ச் ரொம்ப ஸ்லோவாகிவிடும்.

ஆடுகளத்தின் தன்மை
இந்த பிட்ச்சின் தன்மையை கருத்தில்கொண்டு முதலில் பேட்டிங் ஆடுகிறோம். 2வது இன்னிங்சில் ஸ்பின்னர்கள் தான் முக்கிய பங்காற்றுவார்கள் என்று நான் நினைக்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications