For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20ல இவங்க தான் "கெத்து".. "ஜஸ்ட்" 15 ஓவரில்.. தென்னாப்பிரிக்காவை ஓடவிட்ட பொல்லார்ட்

கிரெநேடா: வெஸ்ட் இண்டீஸ் அணி, தென்னாப்பிரிக்காவை சும்மா சுழட்டி விட்டு டி20 போட்டியில் அடித்திருக்கிறது.

தென்னாப்பிரிக்கா அணி தற்போது வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், செயின்ட் லூசியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் இரண்டிலும் வெற்றிப் பெற்று கோப்பையை கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா.

160 ரன்கள்

160 ரன்கள்

ஆனால், நேற்று (ஜூன்.26) இரவு நடந்த தொடங்கிய முதல் டி20 போட்டியில் தனது வலிமையை நிரூபித்திருக்கிறது வெஸ்ட் இண்டீஸ். செயின்ட் ஜார்ஜில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்திருக்கிறது. அதிகபட்சமாக வான் டெர் டூசன் 38 பந்துகளில் 56 ரன்கள் எடுக்க, டி காக் 37 ரன்கள் சேர்த்தார்.

ஜஸ்ட் 15 ஓவரில்

ஜஸ்ட் 15 ஓவரில்

இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் முதல் பந்தில் இருந்தே அடி இடி மாதிரி இருந்தது. ஃபிளெட்சர் 19 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க, மற்றொரு ஓப்பனர் எவின் லெவிஸ் பாரபட்சமின்றி 35 பந்துகளில் 71 ரன்கள் விளாசினார். பிறகு க்றிஸ் கெயில் 24 பந்துகளில் 32 ரன்களும், ரஸல் 12 பந்துகளில் 23 ரன்களும் எடுக்க, ஜஸ்ட் 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து மிரட்டலாக வெற்றிப் பெற்றது வெஸ்ட் இண்டீஸ்.

டி20 ஆதிக்கம்

டி20 ஆதிக்கம்

கடந்த 15 வருடங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டத்திறன் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெகுவாக குறைந்துவிட்டது எனலாம். குறிப்பாக, பிரைன் லாரா, சந்தர்பால், ராம்நரேஷ் சர்வான் போன்ற மெகா வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு, அந்த அணியும் ஓய்வு பெற்றது போன்ற நிலைக்கு சென்றுவிட்டது. 20 ஆண்டுகள் முன்பு வரை வரை இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தும் திறமையை பெற்றிருந்த வெஸ்ட் இண்டீஸ், இன்று டி20 போட்டிகளில் மட்டும் ஆதிக்கம் செலுத்துகிறது. இரண்டு முறை டி20 உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியில் உருவாகும் வீரர்கள் அனைவரும் டி20 கிரிக்கெட்டை மையமாக வைத்தே அணிக்குள் நுழைகிறார்கள் தவிர்த்து, அவர்களிடம் டெஸ்ட் கிரிக்கெட் ஆட வேண்டும் போன்ற ஆர்வத்தை காண முடிவதில்லை.

4 டி20 போட்டிகள்

4 டி20 போட்டிகள்

இப்படி சில விமர்சனங்கள் ஒருபக்கம் இருந்தாலும், டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை உலகின் ராஜாவாக வலம் வருகிறது வெஸ்ட் இண்டீஸ். எப்பேர்ப்பட்ட அணியாக இருந்தாலும், ஊதித் தள்ளிவிடுகிறார்கள். 2016ல் இந்தியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் தோனி தலைமையிலான இந்திய அணியை கதற கதற அடித்ததை எந்த ரசிகரால் மறந்திருக்க முடியும்? இன்று வரை டி20 கிரிக்கெட் என்றால் அவர்கள் தான் ராஜா. அப்படித்தான் தான் தென்னாப்பிரிக்காவையும் இப்போது பந்தாடி வருகிறது. இன்னும் 4 டி20 போட்டிகள் மீதமுள்ளது. என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம்.

Story first published: Sunday, June 27, 2021, 18:14 [IST]
Other articles published on Jun 27, 2021
English summary
WI thrashed SA 8 wickets in 1st t20 match - வெஸ்ட் இண்டீஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+