Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கண்ணீருடன் விடைபெற்ற ஜாம்பவான்.. கடைசி போட்டியிலும் சிக்ஸர் மழை பொழிந்த ஆண்ட்ரே ரஸ்ஸல்

சபீனா பார்க்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக தனது கடைசி சர்வதேச டி20 போட்டியில் ஆண்ட்ரே ரஸ்ஸல் களம் கண்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அவர் முன்பே அறிவித்து இருந்தார். தனது கடைசி சர்வதேச போட்டியான இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது, ரஸ்ஸல் தனது வழக்கமான அதிரடி பாணியில் விளையாடினார்.

முன்னதாக இந்த டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இருந்த ஆஸ்திரேலியா, டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கில் தடுமாறியது. 13.5 ஓவர்களில் 98 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்த நிலையில், 7வது வீரராக களம் இறங்கினார் ஆண்ட்ரே ரஸ்ஸல். இந்தப் போட்டிதான் தனது சொந்த ஊரான சபீனா பார்க்கில் விளையாடும் கடைசி சர்வதேசப் போட்டி என்று அவர் ஏற்கனவே அறிவித்திருந்ததால் அவர் பேட்டிங் செய்ய வந்த போது ரசிகர்கள் உணர்ச்சிப்பெருக்குடன் இருந்தனர்.

WI vs AUS Andre Russell s Explosive retirement Emotional Goodbye in Last T20

களத்துக்கு வந்த உடன் தனது வழக்கமான அதிரடி பாணியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்த ஆண்ட்ரே ரஸ்ஸல், வெறும் 15 பந்துகளில் 36 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்த உதவினார். ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் பென் ட்வார்ஷுய்ஸ் வீசிய 14வது ஓவரில் அவர் அடித்த மூன்று சிக்ஸர்கள், ஒன்று நேராகவும், மற்றொன்று விக்கெட் கீப்பருக்கு மேலாகவும், மூன்றாவது மிட்-விக்கெட் திசையிலும் பறந்தன. இது ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமைந்தது. அவர் தனது ஆட்டத்தில் மொத்தம் 4 சிக்ஸர்களை விளாசினார்.

ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆட்டமிழந்து வெளியேறியபோது, 16.5 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 139க்கு 6 விக்கெட்கள் என்ற நிலையில் இருந்தது. ஆஸ்திரேலிய வீரர்கள் அவரைப் பாராட்டினர். மேலும், சபீனா பார்க் மைதானத்தில் கூடி இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி அவருக்கு மரியாதை செலுத்தினர்.

ஆண்ட்ரே ரஸ்ஸல் பேட்டிங்கில் ஜொலித்த போதிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தப் போட்டியில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

2012 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பிடித்திருந்த ஆண்ட்ரே ரஸ்ஸல், தனது 86 டி20 போட்டிகள் கொண்ட பயணத்தை 1122 ரன்களுடனும், 160-க்கு மேற்பட்ட ஸ்டிரைக் ரேட்டுடனும், 61 விக்கெட்டுகளுடனும் நிறைவு செய்து இருக்கிறார். அவர் 56 ஒருநாள் போட்டிகளில் 130 ஸ்டிரைக் ரேட்டுடன் 1034 ரன்களும், 70 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். மேலும், 2010-ல் ஒரே ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடிய ரஸ்ஸல் அதில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிகச்சிறந்த டி20 கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக ஆண்ட்ரே ரஸ்ஸல் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு இரு அணி வீரர்களும் இருபுறமும் நின்று கார்ட் ஆஃப் ஹானர் என்ற மரியாதையை அளித்தனர். பின்னர் அவர் கண்ணீருடன் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றார்.

Story first published: Wednesday, July 23, 2025, 10:16 [IST]
Other articles published on Jul 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+