For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதான் டா ட்விஸ்ட்.. வெஸ்ட் இண்டீஸ்-ஐ 3வது நாளில் காலி செய்த ஆஸ்திரேலியா.. மாபெரும் வெற்றி

பார்படோஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டியில் இரு அணிகளுமே முதல் இன்னிங்ஸில் குறைவான ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அபாரமாக ஆடி 310 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 301 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

அந்த பெரிய இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 141 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதை அடுத்து, ஆஸ்திரேலியா அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. ஜோஷ் ஹேசில்வுட் அபாரமாக பந்து வீசி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் எளிதான வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

WI vs AUS Australia s Dominant Win Over West Indies in First Test

இந்த டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலியாவை விட 10 ரன்கள் முன்னிலை பெற்றது.

அடுத்து ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது, 65 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனால், அந்த அணி வெற்றி பெற வாய்ப்பில்லை என்றே பலரும் கருதினர். ஆனால், மூன்றாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா சுதாரித்தது.

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் அதிரடி அரை சதங்கள்

அந்த அணியின் மூன்று பேட்ஸ்மேன்கள் வரிசையாக அரை சதம் அடித்தனர். டிராவஸ் ஹெட் 61 ரன்களும், பி.யு. வெப்ஸ்டர் 63 ரன்களும், அலெக்ஸ் கேரி 65 ரன்களும் சேர்த்தனர். இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 310 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 301 ரன்கள் என்ற கடினமான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

ஜோஷ் ஹேசில்வுட்டின் மிரட்டல் பந்துவீச்சு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜோஷ் ஹேசில்வுட் சிம்ம சொப்பனமாக விளங்கினார். இரண்டாவது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்தபோது, அவர் அபாரமாக பந்துவீசி 12 ஓவர்களில் 43 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸிலும் அவர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

நாதன் லியோன் 2.4 ஓவர்களில் 20 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதை அடுத்து, ஆஸ்திரேலியா 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Story first published: Saturday, June 28, 2025, 8:07 [IST]
Other articles published on Jun 28, 2025
English summary
WI vs AUS: Australia's Dominant Win Over West Indies in First Test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+