For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெஸ்ட் இண்டீஸ் அணி மீது வன்மத்தை கக்கும் அம்பயர்.. பொங்கி எழுந்த தலைமை பயிற்சியாளர் டேரன் சமி

பார்படோஸ்: அம்பயர் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக செயல்படுவதாக தனக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் சமி வெளிப்படையாக கூறி இருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தான் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வரும் முதல் டெஸ்ட் போட்டி பார்படோஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இரண்டு நாள் ஆட்டம் மட்டுமே முடிவடைந்துள்ளது. இந்த இரண்டு நாட்களில் மட்டும் மூன்றாவது அம்பயர் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் ஐந்து தவறான முடிவுகளை எடுத்தார். அதில் ஒன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராகச் சென்றது. மற்ற நான்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகச் சென்றது.

WI vs AUS Darren Sammy Suspects Bias from Umpire Adrian Holdstock

குறிப்பாக, சாய் ஹோப் அடித்த பந்தை ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி கேட்ச் பிடித்தபோது பந்து தரையில் பட்டு இருந்தது. அதை ரீப்ளே செய்து பார்த்துவிட்டு அவுட் என அட்ரியன் அறிவித்தது கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில்தான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் சமி இதுகுறித்து பேசியுள்ளார். "நாங்கள் இது குறித்து புரிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். ஒரு முடிவு எடுக்கப்படும்போது அது தொடர்ந்து ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஏதேனும் ஒரு முடிவில் சந்தேகம் இருந்தால், அது தொடர்பான முடிவு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

இந்தக் குறிப்பிட்ட அம்பயர் தொடர்ந்து எங்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். இங்கிலாந்தில் இருந்தே இது ஆரம்பித்துவிட்டது. இது மிகவும் வெறுப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. முடிவு எடுக்கும்போது ஒரே மாதிரியாக இருங்கள் என்று மட்டும்தான் நாங்கள் கேட்கிறோம். இது தொடர்பாகப் புகார் அளிப்பது பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம்," என்றார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக செயல்பட்டு வரும் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வேண்டுமென்றே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகச் செயல்படுவதாக டேரன் சமி பேசி இருக்கும் நிலையில், சர்வதேச கிரிக்கெட் அமைப்பு (ICC) அந்த நடுவரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இருந்து நீக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இனி வெஸ்ட் இண்டீஸ் விளையாடும் போட்டிகளுக்கு அவர் நடுவராக இல்லாமல் இருப்பதே இந்தச் சர்ச்சைக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி சற்று முன்னிலை பெற்றிருந்தாலும், அந்த அணி ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்பை அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் சுக்குநூறாக உடைத்துவிட்டார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 180 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 190 ரன்கள் எடுத்தது. ஒருவேளை நடுவரின் முடிவுகள் சரியாக அமைந்திருந்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி 220 அல்லது 250 ரன்கள் கூட எடுத்திருக்கலாம். மிகவும் நெருக்கமாகச் சென்று கொண்டிருக்கும் இந்தப் போட்டியில், அந்த கூடுதல் ரன்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கும்.

Story first published: Friday, June 27, 2025, 14:00 [IST]
Other articles published on Jun 27, 2025
English summary
WI vs AUS: Darren Sammy Suspects Bias from Umpire Adrian Holdstock
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+