Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WI vs ENG : மரண அடி அடித்த ஆண்ட்ரே ரஸ்ஸல்.. கதிகலங்கிய இங்கிலாந்து அணி படுதோல்வி

பிரிட்ஜ்டவுன் : ஆண்ட்ரே ரஸ்ஸல் நீண்ட காலத்திற்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்பிய கையோடு இங்கிலாந்து அணியா கதிகலங்க வைத்தார். ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் இடையே நடந்த முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. உலகம் முழுவதும் டி20 லீக் போட்டிகளில் மட்டுமே ஆடி வந்த ஆண்ட்ரே ரஸ்ஸல் நீண்ட காலத்திற்கு பின் அணிக்கு திரும்பினார். ஆல் - ரவுண்டரான ரஸ்ஸல் பந்துவீச்சிலேயே தன் முத்திரையை பதித்தார்.

WI vs ENG : Andre Russell powered West Indies to beat England in 1st T20

இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த போது ரஸ்ஸல் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளரான அல்சாரி ஜோசப் 3.3 ஓவர்களில் 54 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். ரொமாரியோ ஷெப்பர்ட் 4 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து ஆல் - அவுட் ஆகி இருந்தது.

அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி சேஸிங் செய்தது. அந்த அணியின் பிரான்டன் கிங் 22, கைல் மேயர்ஸ் 35, ஷாய் ஹோப் 36 ரன்கள் குவித்தனர். 14.4 ஓவர்களில் 123 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் இழந்தது வெஸ்ட் இண்டீஸ். அப்போது ஜோடி சேர்ந்த ரோவ்மன் பாவெல் - ஆண்ட்ரே ரஸ்ஸல் ஜோடி அதிரடியில் பட்டையைப் கிளப்பியது.

பாவெல் 15 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். ஆண்ட்ரே ரஸ்ஸல் 14 பந்துகளில் 29 ரன்கள் குவித்தார். கடைசி ஓவர் வரை செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட போட்டியை 18.1 ஓவரிலேயே முடித்து வைத்தது இந்த ஜோடி. பவுலிங், பேட்டிங் என இரண்டிலும் இங்கிலாந்து அணியை பதற வைத்த ரஸ்ஸல், நீண்ட நாட்களுக்கு பின் அணிக்கு திரும்பிய முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Story first published: Wednesday, December 13, 2023, 12:04 [IST]
Other articles published on Dec 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+