Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்தை ஓடவிட்ட வெஸ்ட் இண்டீஸ்.. அதிரடியில் பொளந்துகட்டிய எவின் லூவிஸ்.. பாவம் லிவிங்ஸ்டன்!

ஆண்டிகுவா: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அனி டிஎல்எஸ் முறைப்படி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று அசத்தியுள்ளது. அதிரடியாக விளையாடிய எவின் லூவிஸ் டி20 மோடில் 69 பந்துகளுக்கு 8 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 94 ரன்களை விளாசி அசத்தினார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்னும் 4 மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், இங்கிலாந்து அணி தயாராகும் பணிகளை தொடங்கியுள்ளது. அதற்கான முதற்கட்டமாக இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கான வெஸ்ட் இண்டீஸ் பயணித்துள்ளது.

wi vs eng evin lewis west indies england

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஆண்டிகுவா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் பவிலிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 45.1 ஓவர்களுக்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தது.

அந்த அணியின் கேப்டன் லிவிங்ஸ்டன் 49 பந்துகளில் 48 ரன்களும், சாம் கரண் 56 பந்துகளில் 37 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் நல்ல தொடக்கம் கிடைத்தும் பெரிய ஸ்கோரை எடுக்க முயற்சிக்காமல், அதிரடியாக விளையாடி விக்கெட்டை பறிகொடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் மோட்டீ 4 விக்கெட்டுகளையும், மேத்யூ ஃபோர்ட், ஜெய்டன் சீல்ஸ், அல்ஜாரி ஜோசப் உள்ளிட்ட வீரர்கள் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் பிரண்டன் கிங் - எவின் லூவிஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, இங்கிலாந்து அணி பவுலர்களால் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. சிறப்பாக ஆடிய எவின் லூவிஸ் 46 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோர் 15 ஓவர்களில் 81 ரன்களாக இருந்தது. அப்போது திடீரென மழை குறுக்கிட, ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இதன்பின் ஆட்டம் 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனால் டிஎல்எஸ் விதிப்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 157 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்பின் எவின் லூவிஸ்-ன் அதிரடி அடுத்த கட்டத்திற்கு சென்றது. முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், பிரண்டன் கிங் 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

சிறப்பாக ஆடிய எவின் லூவிஸ் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, 69 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 25.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. கேர்டி - ஷாய் ஹோப் கூட்டணி இறுதி வரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தனர். இதன் காரணமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Story first published: Friday, November 1, 2024, 12:19 [IST]
Other articles published on Nov 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+