For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WI vs ENG : 5 பந்தில் 24 ரன்.. ஹார்ட் பீட்டை எகிற வைத்த ஹாரி ப்ரூக்.. ஏமாந்து போன வெஸ்ட் இண்டீஸ்

கிரேனிடா : வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஹாரி ப்ரூக் கடைசி ஓவரில் மூன்று சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து தன் அணியை வெற்றி பெற வைத்தார்.

2023 ஐபிஎல் தொடரில் ரிங்கு சிங் கடைசி 5 பந்துகளில் 28 ரன்கள் தேவை என்ற நிலையில் ஐந்து சிக்ஸ் அடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பெற வைத்தார். கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு நிலையில் ஹாரி ப்ரூக் இங்கிலாந்து அணியை கடைசி ஓவரில் வெற்றி பெற வைத்தார்.

WI vs ENG : Harry Brook scored 21 runs in last over and England beat West Indies in 3rd T20I match.

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் இடையே ஆன ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இருந்த நிலையில், மூன்றாவது போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை இழக்காமல் இருக்க முடியும் என்ற நிலையில் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது. நிக்கோலஸ் பூரன் 45 பந்துகளில் 85 ரன்கள் குவித்து இருந்தார். அடுத்து இங்கிலாந்து அணி சேஸிங் செய்தது. ஜோஸ் பட்லர் துவக்க வீரராக இறங்கி 34 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். வில் ஜாக்ஸ் 1 ரன்னில் அவுட் ஆனார்.

மறுபுறம் துவக்க வீரர் பிலிப்ஸ் சால்ட் அபார ஆட்டம் அடி பவுண்டரி மழை பொழிந்தார். அடுத்து வந்த லியாம் லிவிங்க்ஸ்டன் 18 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். ஐந்தாம் வரிசையில் ஹாரி ப்ரூக் 18வது ஓவரின் இறுதியில் களமிறங்கினார்.

தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார் ஹாரி. கடைசி 2 ஓவரில் 31 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், 19வது ஓவரில் பெரும்பாலான பந்துகளை சந்தித்த பிலிப்ஸ் சால்ட் ஒரு சிக்ஸ் மட்டுமே அடித்தார். அந்த ஓவரில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தது இங்கிலாந்து.

கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹாரி ப்ரூக் அந்த ஓவரின் முதல் பந்தை சந்தித்தார். அதில் ஒரு ஃபோர் அடித்தார். அதைத் தொடர்ந்து இரண்டு சிக்ஸ் அடித்தார். நான்காவது பந்தில் 2 ரன்கள் ஓடினார். கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில் ஐந்தாவது பந்தில் ஒரு சிக்ஸ் அடித்து வெற்றி இலக்கை எட்டச் செய்தார் ஹாரி ப்ரூக். கடைசி ஓவரில் 5 பந்துகளில் 24 ரன்கள் குவித்தார். 21 ரன்களை இங்கிலாந்து அணி அடிப்பது கடினம் என வெற்றிக் கனவில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஏமாற்றம் அடைந்தது.

பிலிப்ஸ் சால்ட் 56 பந்துகளில் 109 ரன்கள் அடித்து இருந்தார். என்ன தான் சால்ட் அபார ஆட்டம் ஆடி இருந்தாலும் கடைசி ஓவரில் ஹாரி ப்ரூக் கடினமான சவாலை எதிர்கொண்டு இங்கிலாந்து அணியை வெற்றி பெற வைத்தார். 7 பந்தில் 31 ரன்கள் சேர்த்து இருந்தார் ஹாரி ப்ரூக்.

Story first published: Sunday, December 17, 2023, 9:54 [IST]
Other articles published on Dec 17, 2023
English summary
WI vs ENG : Harry Brook scored 21 runs in last over and England beat West Indies in 3rd T20I match.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+