Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னையா டக் அவுட் ஆக்குறீங்க.. வெஸ்ட் இண்டீஸ்-ஐ கரம் வைத்து பொளந்த ஜோஸ் பட்லர்.. இங்கிலாந்து வெற்றி

பார்படோஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடினார்.

இதற்கு முந்தைய போட்டியில் அவரை வெஸ்ட் இண்டீஸ் அணி டக் அவுட் ஆக்கி இருந்தது. அதனால் ஏமாற்றத்தில் இருந்தார். முதல் போட்டியில் ஃபில் சால்ட்டின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து வெற்றி பெற்று இருந்தது. இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் ஜோஸ் பட்லர் அதிரடி ஆட்டம் ஆடி இங்கிலாந்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

wi vs eng jos buttler england west indies

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் வீரர்கள் அதிரடியாக ரன் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் வரிசையாக விக்கெட்களை இழந்து இருந்தனர். கேப்டன் ரோவ்மன் பாவல் சற்று நிதானமாக விளையாடினார். அவர் 41 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார்.

அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் 23 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். ராஸ்டன் சேஸ் 7 பந்துகளில் 13 ரன்களும், ரொமாரியோ ஷெப்பர்ட் 12 பந்துகளில் 22 ரன்களும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி மொத்தமாகவே இரண்டு சிக்ஸ் மட்டுமே அடித்து இருந்தது. ரோவ்மன் பாவல் மட்டுமே அந்த இரண்டு சிக்ஸர்களை அடித்து இருந்தார்.

அடுத்து 159 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி ஆடியது. துவக்க வீரர் ஃபில் சால்ட் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். அடுத்து வில் ஜாக்ஸ் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினர். வில் ஜாக்ஸ் 29 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அவர் ஐந்து ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து இருந்தார்.

மறுபுறம் ஜோஸ் பட்லர் ஃபோர், சிக்ஸ் என வரிசையாக பவுண்டரி அடித்தார். லியாம் லிவிங்ஸ்டன் 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார். அவர் மூன்று ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஜோஸ் பட்லர் 45 பந்துகளில் 83 ரன்கள் சேர்த்து 13வது ஓவரில் ஆட்டம் இழந்தார். அவர் எட்டு ஃபோர் மற்றும் ஆறு சிக்ஸ் அடித்து இருந்தார்.

இங்கிலாந்து அணி 14.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து 2 - 0 என முன்னிலை பெற்றது.

இந்த தொடரின் முதல் போட்டியில் டக் அவுட் ஆன ஜோஸ் பட்லர் அதற்கு பழி தீர்க்கும் வகையில் 6 சிக்ஸ் அடித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதாக வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி மொத்தமே இரண்டு சிக்ஸ் அடித்த நிலையில், இங்கிலாந்து அணி எட்டு சிக்ஸ் அடித்து இருந்தது. அதில் ஜோஸ் பட்லர் மட்டுமே ஆறு சிக்ஸர்களை அடித்து இருந்தார்.

Story first published: Monday, November 11, 2024, 8:37 [IST]
Other articles published on Nov 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+