Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WI vs ENG: 9 சிக்ஸ், 4 ஃபோர்.. வெஸ்ட் இண்டீஸ்-ஐ கதற விட்ட இங்கிலாந்து கேப்டன் லிவிங்ஸ்டன்

ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி ஆன்ட்டிகுவாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் லியாம் லிவிங்ஸ்டன் அதிரடி ஆட்டம் ஆடி 329 ரன்கள் என்ற இமாலய இலக்கை 48 வது ஓவரிலேயே எட்ட முக்கிய காரணமாக இருந்தார்.

அவர் 9 சிக்ஸ் மற்றும் 5 ஃபோர் அடித்து 124 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 1 - 1 என சமனுக்கு கொண்டு வந்துள்ளது. இதை அடுத்து மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டியாக மாறி இருக்கிறது.

wi vs eng england west indies

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் நிதானமாகவே ஆடியது. துவக்க வீரர்கள் பிராண்டன் கிங் 7 ரன்கள் மற்றும் ஈவின் லீவிஸ் 4 ரன்களில் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த கேசி கார்ட்டி 77 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஷாய் ஹோப் சதம் அடித்தார். அவர் சதம் அடித்து, மொத்தம் 127 பந்துகளில் 117 ரன்கள் எடுத்தார்.

அதன் பின் ஷேர்ஃபேன் ரூதர்ஃபோர்டு அதிரடியாக ஆடினார். அவர் 36 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார். ஷிம்ரான் ஹெட்மயர் 11 பந்துகளில் 24 ரன்களும், ராஸ்டன் சேஸ் 22 பந்துகளில் 20 ரன்களும், மேத்யூ போர்ட் 11 பந்துகளில் 23 ரன்களும் எடுத்தனர். 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் எடுத்தது வெஸ்ட் இண்டீஸ்.

அடுத்து சேஸிங் செய்த இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் வில் ஜாக்ஸ் 12 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ஜோர்டன் காக்ஸ் 19 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். மற்றொரு துவக்க வீரரான ஃபிலிப் சால்ட் 59 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்தார்.

நான்காம் வரிசையில் இறங்கிய ஜேக்கப் பெத்தேல் 57 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்தார். அதன்பின் கேப்டன் லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஆல் ரவுண்டர் சாம் கர்ரன் இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினர். சாம் கர்ரன் 52 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார். மறுபுறம் சிக்ஸர் மழை பொழிந்த லியாம் லிவிங்ஸ்டன் 85 பந்துகளில் 124 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர் 9 சிக்ஸ் மற்றும் 5 ஃபோர் அடித்து இருந்தார். இங்கிலாந்து அணி 47.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.

Story first published: Sunday, November 3, 2024, 8:15 [IST]
Other articles published on Nov 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+