Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WI vs ENG: வரலாறு படைத்த அதிரடி மன்னன் நிக்கோலஸ் பூரன்.. ஜாம்பவான் பொல்லார்ட் சாதனை முறியடிப்பு

செயின்ட் லூசியா: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரர் நிக்கோலஸ் பூரன் டக் அவுட் ஆன போதும் வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக சர்வதேச டி20 போட்டிகளில் ஆடிய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் நிகழ்த்தினார்.

நிக்கோலஸ் பூரன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 102 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதற்கு முன்னதாக டி20 ஜாம்பவான் ஆன கீரான் பொல்லார்ட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 101 போட்டிகளில் விளையாடி இருந்ததே அதிகபட்சமாக இருந்தது. அவரது சாதனையை நிக்கோலஸ் பூரன் முறியடித்து இருக்கிறார்.

wi vs eng nicholas pooran west indies


இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் நான்காவது போட்டியில் ஆறுதல் வெற்றிக்காக விளையாடியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்தது. ஃபில் சால்ட் 35 பந்துகளில் 55 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 32 பந்துகளில் 62 ரன்களும் எடுத்தனர். வில் ஜாக்ஸ் 12 பந்துகளில் 25 ரன்களும், ஜோஸ் பட்லர் 23 பந்துகளில் 38 ரன்களும், சாம் கர்ரன் 13 பந்துகளில் 24 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து 219 ரன்கள் என்று இமாலய இலக்கை நோக்கி ஆடியது வெஸ்ட் இண்டீஸ் அணி. 19 ஓவர்களில் அந்த பெரிய இலக்கை எட்டியது வெஸ்ட் இண்டீஸ். அந்த அணியின் ஈவின் லீவிஸ் 31 பந்துகளில் 68 ரன்களும், ஷாய் ஹோப் 24 பந்துகளில் 54 ரன்களும் எடுத்தனர். ரோவ்மன் பாவல் 23 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு 17 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.

அதிரடி பேட்ஸ்மேன் ஆன நிக்கோலஸ் பூரன் இந்த தொடரில் சரியாக ரன் குவிக்க முடியாமல் திணறி வந்த நிலையில் இந்தப் போட்டியில் அவர் இரண்டு பந்துகளை மட்டும் சந்தித்து டக் அவுட் ஆனார். ஆனாலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக போட்டிகளில் ஆடிய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்தார்.

Story first published: Sunday, November 17, 2024, 11:07 [IST]
Other articles published on Nov 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+