Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்துக்கு ஆப்பு.. வாழ்வா சாவா போட்டியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ்.. ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை!

பார்படாஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் வென்றதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி பங்கேற்றது. முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில், கடைசி போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா ஆட்டமாக மாறியது. இதனைத் தொடர்ந்து டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் பவுலிங்கை தேர்வு செய்தார்.

wi vs eng west indies england

இதன்பின் இங்கிலாந்து அணியின் சால்ட் - வில் ஜாக்ஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. 3வது ஓவரிலேயே வில் ஜாக்ஸ் 5 ரன்களிலும், தொடர்ந்து வந்த ஜோர்கன் காக்ஸ் 1 ரன்னிலும், பெத்தெல் டக் அவுட்டாகியும் வெளியேற, இங்கிலாந்து அணி 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தது. பின்னர் வந்த கேப்டன் லிவிங்ஸ்டன் காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, அவரும் 6 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். இதனால் இங்கிலாந்து அணியின் நிலை பரிதாபமாகியது.

ஆனாலும் சால்ட் - சாம் கரண் கூட்டணி இணைந்து 5வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சிறப்பாக ஆடிய சாம் கரண் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் பில் சால்ட் அபாரமாக விளையாடி அரைசதத்தை கடந்தார். பின் அவரும் 74 ரன்களில் வெளியேற, கடைசி நேரத்தில் வந்த மவுஸ்லி 57 ரன்களும், ஓவர்டன் 21 பந்துகளில் 32 ரன்களும், ஆர்ச்சர் 17 பந்துகளில் 38 ரன்களும் எடுத்து அசத்தினர்.

இதனால் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 263 ரன்கள் என்ற கவுரவ ஸ்கோரை பதிவு செய்தது. பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கிங் - லூவிஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இருவரும் அதிரடியாக ரன்களை குவித்த நிலையில், லூவிஸ் 19 ரன்களில் ஆட்டமிழக்க, கிங் உடன் கார்டி கூட்டணி அமைத்தார். இருவரும் இங்கிலாந்து அணியின் பவுலர்களை பொளந்து கட்டினர்.

இவர்கள் இருவரும் 2வது விக்கெட்டுக்கு 209 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சிறப்பாக ஆடிய கேசி கார்டி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையும், பிரண்டன் கிங் தனது 3வது சதத்தையும் விளாசினர். தொடர்ந்து ஆடிய கிங் 117 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் கார்டியுடன் இணைந்து கேப்டன் ஹோப் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.

கடைசி வரை களத்தில் இருந்த கார்டி 114 பந்துகளில் 2 சிக்ஸ், 15 பவுண்டரி உட்பட 128 ரன்களை விளாசினார். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. அதுமட்டுமல்லாமல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

Story first published: Thursday, November 7, 2024, 8:12 [IST]
Other articles published on Nov 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+