Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாழ்ந்து கெட்ட ஜமீன் வெஸ்ட் இண்டீஸ்.. நேற்று வந்த அயர்லாந்திடம் 124 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

டுபிளின்: ஐபிஎல் தொடரில் எப்படி சிஎஸ்கே அணி கடந்த இரண்டு சீசன்களாக வாழ்ந்து கெட்ட ஜமீன் போல் ஆகிவிட்டதோ, அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி படுமோசமாக விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒரு முறை தான் வெற்றியை பெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் ஒரு நாள் போட்டி நகரில் நடைபெற்றது.

Ireland Beat West Indies

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக சாய் ஹோப் செயல்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங், ஈவன் லீவிஸ், ஜஸ்டின் க்ரிவ்ஸ், ராஸ்டன் செஸ், அல்சாரி ஜோசப், சம்மர் ஜோசப் போன்ற ஸ்டார் வீரர்கள் இருந்தனர்.

இதனால் அயர்லாந்து அணியை எளிதில் வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியின் தொடக்க வீரர் பால்பிரின் அபாரமாக விளையாடி 112 ரன்கள் விளாசினார். இதைப் போன்று கேப்டன் பால் ஸ்டர்ல்லிங் 54 ரன்களும், ஹேரி டேக்டர் 56 ரன்களும், லோர்சன் டக்கர் 30 ரன்கள் எடுக்க அயர்லாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரரான பிராண்டன் கிங் 19 ரன்களில் வெளியேற, ஈவன் லீவிஸ் இரண்டு ரன்களிலும் கேசி கார்டி ஆறு ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சாய் ஹோப் இரண்டு ரன்களில் வெளியேற, அமீர் ஜாங்கோ டக் அவுட் ஆனார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 31 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் ராஸ்டன் செஸ் கடைசி வரை போராடி 55 ரன்களில் ஆட்டமிழக்க ஜஸ்டின் க்ரீவிஸ் 35 ரன்களும், மேத்தீவ் போர்டே 38 ரன்கள் எடுத்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணி 34.1 ஓவரில் 179 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அயர்லாந்து பந்துவீச்சில் பேரி மெக்கத்தி நான்கு விக்கெட்டுகளும், ஜார்ஜ் மூன்று விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் அயர்லாந்து அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றது. டெஸ்ட் விளையாடும் அணிக்கு எதிராக அயர்லாந்து அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

Story first published: Thursday, May 22, 2025, 13:52 [IST]
Other articles published on May 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+