Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WI vs NZ: இதுதான்டா டெஸ்ட் மேட்ச்.. 5வது நாளில் நியூசிலாந்தை கதறவிட்ட வெஸ்ட் இண்டீஸ்.. கிரீவ்ஸ் இரட்டை சதம்

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமாக விளையாடி போட்டியை சமன் செய்து இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் நியூசிலாந்து அணி தற்போது முதல் ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் உடன் எதிர்கொண்டது.

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 231 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வழக்கம்போல் பேட்டிங்கில் தடுமாறியது.

WI vs NZ

நான்கு வீரர்கள் டக் அவுட்டாக அந்த அணி 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. 64 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. இதில் கேப்டன் டாம் லாத்தம் 145 ரன்களும், முன்னாள் சிஎஸ்கே வீரரான ரச்சின் ரவீந்திரா 176 ரன்களும் எடுக்க நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 466 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

இதனை அடுத்து 531 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. வழக்கம் போல் டாப் வரிசையில் மூன்று வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 72 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்த சாய் ஹோப் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர்.

இதில் சிறப்பாக விளையாடிய சாய் ஹோப் 14 ரன்கள் எடுத்தார். இந்த தருணத்தில் கடைசி நாள் ஆட்டத்தில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் என்ற ஸ்கோருடன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்தாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஜஸ்டின் கிரீவ்ஸ் தன் வாழ்நாளில் சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை விளையாடினார்.

அவருடைய விக்கெட்டை வீழ்த்த முடியாமல் நியூசிலாந்து அணி தடுமாறியது. அவருக்கு பக்கபலமாக வெஸ்ட் இண்டீஸ் பவுலர் கீமர் ரோச் களத்தில் நின்றார். கீமர் ரோச் 203 பந்துகளை எதிர் கொண்டு வெறும் 58 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இந்த தருணத்தில் ஜஸ்டின் கீர்வ்ஸ் 388 பந்துகளை எதிர் கொண்டு இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். கடைசி வரை இந்த இரண்டு ஜோடிகளும் விக்கெட்டுகளை கொடுக்காமல் விளையாடினர்.

இந்த ஜோடி ஏழாவது விக்கெட்டுக்கு 180 ரன்கள் சேர்த்தது. வெறும் நான்கு விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தபோது நியூசிலாந்து அணி வெற்றி உறுதி என எதிர்பார்த்த நிலையில் ஜஸ்டின் கீர்வ்ஸ் மற்றும் கீமர் ரோச் அந்த அணியின் வெற்றியை தடுத்து போட்டியை டிரா செய்தனர்.

Story first published: Saturday, December 6, 2025, 12:52 [IST]
Other articles published on Dec 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+