Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யப்பா! இன்னுமா புரியலை.. இது பயிற்சிப் போட்டி.. பாகிஸ்தானை மரண ஒட்டு ஓட்டும் ரசிகர்கள்!

Recommended Video

Cricket World cup 2019 : WI vs PAK: பாகிஸ்தானை மரண ஒட்டு ஓட்டும் ரசிகர்கள்!- வீடியோ

நாட்டிங்ஹம் : பாகிஸ்தான் அணி மிக மோசமான, அவமானகரமான தோல்வியுடன் 2019 உலகக்கோப்பை தொடரை துவங்கியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக்கோப்பை தொடரின் இரண்டாம் போட்டியில், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 21.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 105 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ட்விட்டரில் கிண்டல்

ட்விட்டரில் கிண்டல்

பாகிஸ்தான் அணி 21.4 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்ததும், 105 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பலரும் மிக மோசமாக பாகிஸ்தான் அணியை "ஓட்டி"யுள்ளனர். இந்தியர்கள் தான் அதில் அதிகம். பாகிஸ்தான் ரசிகர்களும் சேர்ந்தே பாகிஸ்தான் அணியை கிண்டல் செய்தார்கள். அதில் சிலவற்றை பார்க்கலாம்.

நிமிடக் கணக்கு

நான் மைதானத்துக்கு போகவே 125 நிமிடம் ஆனது. ஆனால், பாகிஸ்தான் இன்னிங்க்ஸ் மொத்தமே 111 நிமிடங்கள் தான்.

தேசிய விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆடிய லட்சணத்தை பார்த்து விட்டு பாகிஸ்தானியர் ஒருவர் எங்கள் தேசிய விளையாட்டு ஹாக்கி என நக்கலாக கூறியுள்ளார்.

38 நாட்கள் ஆச்சு

பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடருக்கு 38 நாட்கள் முன்பே இங்கிலாந்து வந்துவிட்டது. போட்டி துவங்க வெறும் 38 நிமிடங்கள் இருக்கும் போது அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

சந்தேகமே வேண்டாம்

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன், "பாகிஸ்தான் இப்படி தான் ஆடும். சந்தேகமே வேண்டாம்.. அந்த அணி உலகக்கோப்பை வெல்லும்" என கூறியுள்ளார். இது உண்மையாகவே சொன்னதா? இல்லை நையாண்டியா? நீங்களே முடிவு பண்ணிக்குங்க.

டி20 கிடையாது

டியர் பாகிஸ்தான், இது டி20 போட்டி கிடையாது.. ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர்.. சும்மா ஞாபகப்படுத்தினேன்!

பயிற்சிப் போட்டி

சரி, விடுங்கப்பா 2023 உலகக்கோப்பைக்கு பயிற்சிப் போட்டி ஆடுறாங்கன்னு வைச்சுப்போம்

இப்படியே போனா..

இப்படியே போனா இங்கிலாந்து அணி கூட 50+ ஸ்கோர் தான் அடிப்போம். எனக்கு நம்பிக்கை இருக்கு.. பாகிஸ்தான் மீண்டு வரும்.. என நம்பிக்கை தெரிவித்து.. வரிசையாக சிலர் தடுக்கி விழும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

Story first published: Friday, May 31, 2019, 22:11 [IST]
Other articles published on May 31, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+