Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படியா மிரண்டு போய் ஆடுவாங்க? பேட்டிங் பிட்ச்ல கூட ஒழுங்கா ஆட முடியாதா? பொங்கிய பாக். ரசிகர்கள்!!

Recommended Video

பாகிஸ்தானின் மோசமான பேட்டிங் ! பொங்கிய பாக். ரசிகர்கள்!!

நாட்டிங்ஹம் : வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தான் படுமோசமாக பேட்டிங் செய்தது.

1
43645

வெறும் 105 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சு சராசரியானதுதான் என பல கிரிக்கெட் விமர்சகர்களும் கூறி இருந்த நிலையில், அவர்களிடமே தடுமாறியுள்ளது பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடருக்கு முன்பே மோசமாகத் தான் விளையாடி வந்தது. அதனால், பாகிஸ்தான் ரசிகர்கள் அந்த அணியிடம் பெரிய எதிர்பார்ப்பை எல்லாம் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால், பாகிஸ்தான் அணி வெறும் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது அவர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

மிரண்டனர்

மிரண்டனர்

இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இது பேட்டிங் பிட்ச் என்பதால், பாகிஸ்தான் எப்படியும் நன்றாக ஆடும் என்று கருதப்பட்டது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப் பந்துவீச்சை கண்டு மிரண்டனர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்.

பவுன்சர் தாக்குதல்

பவுன்சர் தாக்குதல்

துவக்க வீரர் இமாம் உல் ஹக் துவங்கி, கடைசி வீரர் வரை வேகப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தான் வீரர்கள் பவுன்சர் பந்தை கண்டால் மிரண்டு போவதை சரியாக கணித்து, தொடர்ந்து ஷார்ட் பந்துகள் மற்றும் பவுன்சர் பந்துகளை வீசி அவர்களை தாக்கினர்.

பேட்டிங் படுமோசம்

பேட்டிங் படுமோசம்

அதற்கேற்றார் போல, பாகிஸ்தான் வீரர்களும், வரிசையாக ஆட்டமிழந்தனர். அந்த அணியில் பாக்கர் ஜமான், பாபர் ஆசாம் தலா 22 ரன்கள் எடுத்தனர். அவர்களுக்கு அடுத்து முஹம்மது ஹபீஸ் 16, வஹாப் ரியாஸ் 18 ரன்கள் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லோரும் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

சிறிய இன்னிங்க்ஸ்

சிறிய இன்னிங்க்ஸ்

பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் தன் மிகச் சிறிய இன்னிங்க்ஸ்-ஐ பதிவு செய்தது. வெறும் 21.4 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்த அந்த அணி 105 ரன்கள் எடுத்தது. இது உலகக்கோப்பை தொடர்களில் இரண்டாவது மிகக் குறைந்த ஸ்கோர்.

விக்கெட் வேட்டை

விக்கெட் வேட்டை

vவெஸ்ட் இண்டீஸ் அணியின் ரஸ்ஸல் 2, ஹோல்டர் 3, ஓஷேன் தாமஸ் 4, காட்ரேல் 1 விக்கெட் வீழ்த்தினர். இதில் ரஸ்ஸல் 3 ஓவர்கள் வீசி 4 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். ஒரு மெய்டன் ஓவரும் வீசி அசத்தினார். அவரது பவுன்சர், ஷார்ட் பிட்ச் பந்துகளை சந்திக்கவே தடுமாறியது பாகிஸ்தான் அணி.

Story first published: Friday, May 31, 2019, 18:39 [IST]
Other articles published on May 31, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+