Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீன் மாதிரி துள்ளி குதித்து.. செம கேட்ச்.. முக்கிய விக்கெட்டை காலி செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்!

Recommended Video

World cup 2019 PAK VS WI | உலக கோப்பையில் முக்கியமான சாதனையை சமன் செய்தார் கெயில்

நாட்டிங்ஹம் : பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் சூப்பர் கேட்ச் பிடித்து மிரட்டினார்.

2019 உலகக்கோப்பை தொடரின் இரண்டாம் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் மொத்தமாக நிலைகுலைந்தது. முக்கிய பேட்ஸ்மேனான பாபர் ஆசாம் அணிக்கு கைகொடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரும் அணியை கைவிட்டார்.

நம்பிக்கை

நம்பிக்கை

பாகிஸ்தான் அணி துவக்கத்தில் முதல் 10 ஓவர்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தவித்து வந்தது. அப்போது பாபர் ஆசாம் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் அணியும் நம்பிக்கையுடன் இருந்தது.

நழுவிய கேட்ச்

நழுவிய கேட்ச்

பாபர் ஆசாம் 12 ரன்கள் அடித்து இருந்த போது, கேட்ச் கொடுத்தார். எனினும், அதை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிம்ரான் ஹெட்மயர் நழுவ விட்டார். இது பாகிஸ்தான் அணிக்கு கிடைத்த பெரிய வாய்ப்பாக பார்க்கப்பட்டது.

கேட்ச் கொடுத்த ஆசாம்

கேட்ச் கொடுத்த ஆசாம்

ஆனால், இந்த நிலை சில ஓவர்கள் மட்டுமே நீடித்தது. பாபர் ஆசாம் 22 ரன்கள் அடித்து இருந்த போது ஓஷேன் தாமஸ் வீசிய ஷார்ட்டாக வந்த பந்தை அடிக்க முயன்று, விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப்-பிடம் கேட்ச் கொடுத்தார்.

துள்ளிக் குதித்தார்

துள்ளிக் குதித்தார்

பாபர் ஆசாம் பேட்டில் பட்டு பந்து வருவதை கண்ட ஷாய் ஹோப், மீன் போல வலப்பக்கம் துள்ளினார். சரியாக பந்து அவர் கிளவுஸில் சிக்கியது. உண்மையில், பந்து ஸ்லிப்பில் நின்று இருந்த வீரரை நோக்கியே வந்தது.

முக்கிய விக்கெட்

எனினும், பந்தை தவறவிடாமல் பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு இருந்த ஷாய் ஹோப் துள்ளிக் குதித்து கேட்ச்சை பிடித்து விட்டார். அதோடு, பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட்களை இழந்தது. குறிப்பாக, முக்கிய பேட்ஸ்மேனை இழந்தது.

கேட்ச் விட்டிருந்தால்..

கேட்ச் விட்டிருந்தால்..

பாபர் ஆசாம் ஆட்டமிழக்கும் போது, பாகிஸ்தான் அணி 62 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து இருந்தது. அதன் பின், அந்த அணி 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஒருவேளை பாபர் ஆசாம், நழுவ விட்ட கேட்ச்சால், பெற்ற வாய்ப்பை பயன்படுத்தி தொடர்ந்து ரன் குவித்து இருந்தால், பாகிஸ்தான் அணி மீண்டு இருக்கலாம்.

அபார வெற்றி

அபார வெற்றி

அதற்கு வாய்ப்பே கொடுக்காமல் ஷாய் ஹோப், பாபர் ஆசாம் கதையை முடித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தப் போட்டியில் 106 ரன்கள் இலக்கை 13.4 ஓவர்களில் எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Story first published: Friday, May 31, 2019, 21:14 [IST]
Other articles published on May 31, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+