For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படி ஒரு குண்டு கேப்டனை பார்த்ததே இல்லை.. பாக். கேப்டனை விளாசிய அக்தர்!!

நாட்டிங்ஹம் : பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் தன் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் படுதோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியின் தோல்விக்கு பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற பேட்டிங் தான் காரணம். பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் இந்த தோல்வியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் கேப்டன் சர்ப்ராஸ் அஹ்மதை மிக மோசமாக விமர்சித்து (கலாய்த்து) இருக்கிறார். அப்படி என்ன சொன்னார்?

மோசமான பதிவு

வெஸ்ட் இண்டீஸ் வீசிய பவுன்சர்களை சமாளிக்க முடியாமல் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது பாகிஸ்தான் அணி. வெறும் 21.4 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்து மிக மோசமான உலகக்கோப்பை இன்னிங்க்ஸ்-ஐ பதிவு செய்தது.

அக்தர் பதிவு

அக்தர் பதிவு

இதை தொடர்ந்து பாகிஸ்தான் அணி கடும் விமர்சனங்களை சந்தித்தது. முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் முதலில் "பேச்சற்று இருக்கிறேன்" என ட்விட்டர் பதிவு போட்டு தன் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

குண்டாக இருந்தார்

குண்டாக இருந்தார்

பின்னர், இந்த போட்டி குறித்து கருத்து தெரிவிக்கையில், "பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹ்மதை கிழித்து தொங்க விட்டுள்ளார். சர்ப்ராஸ் அஹ்மது டாஸ் போட வரும் போது அவர் வயிறு வெளியே தள்ளிக் கொண்டு தெரிந்தது. அவர் முகம் கூட குண்டாக இருந்தது".

தகுதி இல்லை

"இப்படி ஒரு தகுதி இல்லாத கேப்டனை நான் பார்ப்பது இதுவே முதல் முறை. அவரால் வேகமாக நகரக் கூட முடியவில்லை. விக்கெட் கீப்பிங் செய்யும் போதும் அவர் மிகவும் சிரமப்பட்டார்." என கடுமையாக விமர்சித்தார் ஷோயப் அக்தர்.

விமர்சனம்

விமர்சனம்

பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடருக்கு முன் பத்து ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்தது. அப்போதே பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் சொதப்பப் போகிறது என பலர் கூறினர். சிலர் கேப்டன் தான் சரியில்லை என்றும் விமர்சித்தனர்.

ஆதரவு

இந்த நிலையில், ஷோயப் அக்தர் பாகிஸ்தான் அணி கேப்டனை விளாசித் தள்ளியுள்ளார். எனினும், கடைசியில் ட்விட்டரில் பதிவு போட்ட அக்தர், ஆயிரம் இருந்தாலும் நம்ம அணிக்கு நாம் தான் ஆதரவு தர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அடுத்து இங்கிலாந்து

அடுத்து இங்கிலாந்து

பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்றதை அடுத்து, இங்கிலாந்து அணியை சந்திக்க உள்ளது. இங்கிலாந்து அணி ஏற்கனவே பலமான அணி. உலகக்கோப்பை தொடருக்கு முன் ஒருநாள் தொடரில் வரிசையாக அந்த அணியிடம் தோற்று வைட்வாஷ் ஆனது பாகிஸ்தான்.

பதற்றத்தில் ரசிகர்கள்

பதற்றத்தில் ரசிகர்கள்

வெஸ்ட் இண்டீஸ் போலவே, இங்கிலாந்து அணியும் வேகப் பந்துவீச்சில் கில்லி. அதனால், பாகிஸ்தான் அணி என்ன செய்யப் போகிறது என்ற பதற்றத்தில் இருக்கின்றனர் பாகிஸ்தான் ரசிகர்கள்.

Story first published: Saturday, June 1, 2019, 20:39 [IST]
Other articles published on Jun 1, 2019
English summary
WI vs PAK Cricket World cup 2019 : Shoaib Akthar slams Pakistan captain Sarfraz Ahmed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+