Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னங்க நடக்குது.. காயம்னு சொல்றீங்க... விளையாடுறாரு... பிசிசிஐ நடவடிக்கை வேணும்!

டெல்லி : காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா இடம்பெறவில்லை.

இந்நிலையில் நேற்றைய சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்று விளையாடினார்.

இதனிடையே, இந்த விவகாரத்தில் பிசிசிஐ தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கேப்டன் திலிப் வெங்சர்க்கார் கோரிக்கை விடுத்துள்ளார்.

காயம் பட்ட ரோகித் சர்மா

காயம் பட்ட ரோகித் சர்மா

கடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்தடுத்த 4 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா விளையாடவில்லை. இந்நிலையில் நேற்றைய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான இறுதி லீக் போட்டியில் அவர் பங்கேற்று விளையாடினார்.

ஆஸ்திரேலிய தொடரில் நீக்கம்

ஆஸ்திரேலிய தொடரில் நீக்கம்

முன்னதாக அவருடைய காயத்தை காரணம் காட்டி அவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரின் இந்திய அணியில் தேர்வாகவில்லை. அன்றைய தேதியிலேயே அவர் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களை மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

பிசியோ குறித்து கேள்வி

பிசியோ குறித்து கேள்வி

இந்நிலையில் ரோகித் சர்மாவை பரிசோதித்து அவர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு ஃபிட்டாக இல்லை என்று இந்திய அணயின் பிசியோ நிதின் படேல் சான்றிதழ் கொடுத்துள்ளது குறித்து முன்னாள் இந்திய கேப்டன் திலிப் வெங்சர்க்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிசிசிஐ தலையிட கோரிக்கை

பிசிசிஐ தலையிட கோரிக்கை

இந்திய அணிக்காக விளையாடுவதை காட்டிலும் ஐபிஎல்லில் விளையாடுவது ரோகித்திற்கு முக்கியமானதா என்று வெங்சர்க்கார் கேள்வி எழுப்பியுள்ளார். தேசத்திற்காக விளையாடுவது முக்கியமா அல்லது ஒரு அணிக்காக விளையாடுவது முக்கியமா என்றும் அவர் கேட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பிசிசிஐ தலையிட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Story first published: Wednesday, November 4, 2020, 20:31 [IST]
Other articles published on Nov 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+