Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அக்டோபருக்கு முன் ஐபிஎல்..? முட்டுக்கட்டை போடும் 'ஒரே' சிக்கல் - முடிவுக்கு வாங்கப்பா

மும்பை: ஐபிஎல் 2021 தொடரின் மீதமுள்ள 31 போட்டிகளையும், உலகக் கோப்பை தொடருக்கு முன்பு நடத்த வாய்ப்புள்ளதா என்று பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.

Recommended Video

IPL 2021 நடத்தாம விட்டா... பல Crores Loss ஆகும் | OneIndia Tamil

நாடு முழுவதும் வீசும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக, ஐபிஎல் 2021 தொடர், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு முதன் முதலாக தொற்று உறுதி செய்யப்பட, அடுத்தடுத்து பல வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் கொரோனா பரவத் தொடங்கியது.

பெரும் சிக்கல்

பெரும் சிக்கல்

இந்த நிலையில், மீண்டும் ஐபிஎல் தொடரை எப்போது தொடங்குவது, எங்கு தொடங்குவது என்பதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருப்பதால், இங்கு மீண்டும் ஐபிஎல் தொடங்க வாய்ப்பே இல்லை என்பது மட்டும் உறுதி. பிசிசிஐ தலைவர் கங்குலியும், 'இந்தியாவில் மீண்டும் தொடர் நடத்த வாய்ப்பில்லை' என்று உறுதிப்படுத்திவிட்டார். அதேசமயம், மற்ற நாட்டின் கிரிக்கெட் வாரியங்களுடன், பிசிசிஐ தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கை வாரியங்கள் தொடரை மீண்டும் நடத்த ஆர்வமுடன் உள்ளன.

தற்போதைய நிலை

தற்போதைய நிலை

இலங்கையோ, அமீரகமோ.. தொடரை நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டாலும், எப்போது அதை நடத்துவது என்பதில் தான் பெரும் சிக்கலாம். வரும் அக்டோபரில், டி20 உலகக் கோப்பை தொடங்குகிறது. இந்தியாவில் தான் இத்தொடர் நடத்தப்பட உள்ளது. ஆனால், இந்தியாவின் தற்போதையை நிலையில் உலகக் கோப்பைக்கும் வாய்ப்பில்லை என்பதால், ஒட்டுமொத்த போட்டிகளையும் அமீரகத்தில் நடத்தலாம் என்று கூறப்படுகிறது.

பங்கேற்பது சந்தேகம்

பங்கேற்பது சந்தேகம்

அதேசமயம், மீதமிருக்கும் 31 ஐபிஎல் போட்டிகளையும், உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக நடத்தலாமா, அல்லது அதற்கு பின் நடத்தலாமா என்பதில் இழுபறி நீடிக்கிறது. உலகக் கோப்பைத் தொடருக்கு முன் நடத்த வேண்டுமெனில், வெளிநாட்டு வீரர்களை மீண்டும் ஒருங்கிணைக்கும் பணி சவாலானதாக இருக்கும். முக்கிய அணிகளுக்கு அடுத்தடுத்து தொடர்கள் இருப்பதால், சர்வதேச போட்டிகளை ஒதுக்கிவிட்டு, அந்தந்த நிர்வாகங்கள் ஐபிஎல்-லுக்கு வீரர்களை அனுப்புமா? என்பது பெரும் சந்தேகமே. ஏற்கனவே, 'ஐபிஎல் மீண்டும் எப்போது தொடங்கப்பட்டாலும், இங்கிலாந்து வீரர்கள் அதில் பங்கேற்கமாட்டார்கள்' என்று ஓப்பனாகவே அந்நாட்டின் கிரிக்கெட் வாரியம் அறிவித்துவிட்டது.

ரத்து செய்யலாமா?

ரத்து செய்யலாமா?

அதுவே, உலகக் கோப்பைக்கு பின் ஐபிஎல் நடத்தும் பட்சத்தில், ஓரளவுக்காவது வெளிநாட்டு வீரர்களை ஹோல்ட் செய்ய வாய்ப்பிருக்கிறது. அட்லீஸ்ட், ஒவ்வொரு வெளிநாட்டு அணிகளின் சில 'பி' கிரேட் வெளிநாட்டு வீரர்களையாவது ஐபிஎல்-லில் விளையாட வைக்க முயற்சிக்கலாம். பிசிசிஐ இதனை தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அதேசமயம், இத்தனை போராட்டங்களுக்கு மத்தியில், அந்த 31 போட்டிகளையும் நடத்துவதற்கு பதில், ஐபிஎல் 2021 தொடரை, அப்படியே ரத்து செய்துவிடலாமா என்ற யோசனையிலும் பிசிசிஐ உள்ளதாம்.

Story first published: Monday, May 17, 2021, 14:00 [IST]
Other articles published on May 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+