Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'ஐபிஎல்' லலித் மோடிக்கு வாழ்நாள் தடை விதித்தது பிசிசிஐ!

சென்னை: இந்திய கிரிக்கெட் வாரியத்திலிருந்து லலித் மோடிக்கு ஆயுள் கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதல் 3 ஐபிஎல் போட்டிகளின்போது கமிஷனராக இருந்தவர் லலித் மோடி.

ஆனால் அதன் பின்னர் அவர் மீது பல்வேறு புகார்கள், மோசடிகள், குற்றச்சாட்டுக்கள் எழுந்ததைத் தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் தற்போது அவர் வாழ்நாள் தடைக்கு உள்ளாகியுள்ளார்.

ஐபிஎல்லின் பழைய ராஜா

ஐபிஎல்லின் பழைய ராஜா

லலித் மோடி, ஐபிஎல் அமைப்பை உருவாக்கி அதன் கமிஷனராக இருந்தவர். ஐபிஎல்லை கவர்ச்சிகரமான ஒரு பொருளாக மாற்றியதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு.

ஆனால் ஊழல் செய்து ஓடினார்

ஆனால் ஊழல் செய்து ஓடினார்

இருப்பினும் ஐபிஎல்லில் நடந்த பல ஊழல்கள் குறித்து இவரது பெயர் சர்ச்சையில் சிக்கியது. இதனால் வழக்குகளும் பாய்ந்தன. இதையடுத்து கமிஷனர் பொறுப்பிலிருந்து விலகிய மோடி, லண்டனுக்கு ஓடி வி்ட்டார். கடந்த சில வருடங்களாக அங்கேயேதான் அவர் தங்கியிருக்கிறார்.

வாழ்நாள் தடை

வாழ்நாள் தடை

இந்த நிலையில் இனிமேல் கிரிக்கெட் வாரியத்தில் எந்தப் பதவிக்கும் அவர் வர முடியாதபடி, மோடிக்கு ஆயுட்கால தடை விதித்து இன்றைய சென்னை, சிறப்பு வாரியக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

விசாரணைக் கமிட்டி

விசாரணைக் கமிட்டி

2008 முதல் 2010 வரை லலித் மோடி ஐபிஎல் கமிஷனராக இருந்த காலகட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி வி.கே.சாலி விசாரணை நடத்தி அறிக்கை கொடுத்திருந்தார். அது இன்றைய கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதன் பின்னர் வாழ்நாள் தடை விதிக்க முடிவானது.

இதுக்குப் போயி அலட்டிக்கலாமா...

இதுக்குப் போயி அலட்டிக்கலாமா...

முன்னதாக இந்த தடை குறித்து கருத்து தெரிவித்திருந்த லலித் மோடி, என் மீதான பிரச்சினை அல்ல, நான் கவலைப்படவும் இல்லை. ஆனால் கிரிக்கெட் மீதான நம்பிக்கை குறித்து மட்டுமே கவலைப்படுகிறேன் என்றுகூறியிருந்தார்.

Story first published: Wednesday, September 25, 2013, 14:50 [IST]
Other articles published on Sep 25, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+