Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2021ல விளையாட முடியுமான்னு தோனிதான் முடிவெடுக்கணும்... கிரண் மோரே

டெல்லி : ஐபிஎல் 2021 தொடரில் தான் கண்டிப்பாக பங்கேற்று விளையாடுவேன் என்று சிஎஸ்கேவின் இறுதி லீக் போட்டிக்கு முன்பு அளித்த பேட்டியில் கேப்டன் எம்எஸ் தோனி உறுதியுடன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 2021 ஐபிஎல் போட்டிகளில் விளையாட தன்னுடைய உடல் மற்றும் மனம் ஒத்துழைக்குமா என்று தோனி தான் முடிவெடுக்க வேண்டும் என்று முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோரே தெரிவித்துள்ளார்.

எம்எஸ் தோனி அடுத்த சீசனிலும் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என்று அதன் உரிமையாளர் ஸ்ரீனிவாசனும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மோசமான சிஎஸ்கே ஆட்டம்

மோசமான சிஎஸ்கே ஆட்டம்

ஐபிஎல் 2020 சீசனில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் அந்த அணியின் கேப்டன் எம்எஸ் தோனி. அந்த அணியும் சரியான ஆட்டத்தை கொடுக்கவில்லை. மாறாக 14 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருந்து தொடரிலிருந்து விலகியது சிஎஸ்கே.

சர்வதேச போட்டிகளில் ஓய்வு

சர்வதேச போட்டிகளில் ஓய்வு

கடந்த ஆண்டு உலக கோப்பை தொடரின் தோல்விக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாடாத தோனி, கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வையும் அறிவித்தார். இதையடுத்து நேரடியாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று விளையாடியதால் அவரால் சிறப்பான ஆட்டத்தை கொடுக்க முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

முன்னாள் கேப்டன் கபில்தேவ் அறிவுறுத்தல்

முன்னாள் கேப்டன் கபில்தேவ் அறிவுறுத்தல்

முன்னாள் கேப்டன் கபில் தேவும், தோனி ஐபிஎல்லுக்கு ஐபிஎல் மட்டுமே விளையாடினால் இவ்வாறு தான் சொதப்புவார் என்று குறிப்பிட்டிருந்தார். மாறாக உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதன்மூலம் அவருக்கு பயிற்சி கிடைக்கும் என்றும் அவரால் சிறப்பாக விளையாட முடியும் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.

தோனி தான் முடிவெடுக்க வேண்டும்

தோனி தான் முடிவெடுக்க வேண்டும்

இந்நிலையில் தோனி அடுத்த ஆண்டும் தொடர்ந்து விளையாடுவதற்கு அவருடைய மனம் மற்றும் உடல்நிலை ஒத்துழைக்குமா என்பது குறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோரே தெரிவித்துள்ளார். மாறாக வயது என்பது வெறும் நம்பர் மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்து செல்ல வேண்டும்

கடந்து செல்ல வேண்டும்

கடந்த 11 ஆண்டுகளாக சிஎஸ்கேவிற்காக தோனி விளையாடிவரும் நிலையில் இந்த ஆண்டு அவருக்கு மோசமானதாக அமைந்துள்ளதாக குறிப்பிட்ட மோரே, 3 ஐபிஎல் கோப்பைகளை வெல்வது சாதாரணமான விஷயம் இல்லை என்றும் கூறியுள்ளார். சிஎஸ்கே இந்த ஆண்டின் குறைகளை போக்கிக் கொண்டு மீண்டும் சிறப்பாக விளையாடும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, November 12, 2020, 18:21 [IST]
Other articles published on Nov 12, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+