Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெறும் 22 வயது.. 2 வருடத்தில் அசுர வளர்ச்சி; வியக்கும் மற்ற பவுலர்கள் - இந்திய அணியில் வாய்ப்பு?

ஷார்ஜா: இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு அட்டகாசமான ஃபாஸ்ட் பவுலர் கிடைத்துவிட்டார் என்று உறுதியாக இவரை கூறலாம். யார் இவர்?

ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பகுதி அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இன்று டபுள் ஹெட்டர்ஸில், முதல் போட்டியாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்டை பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். மும்பை அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

 பஞ்சாப் நிலைமை

பஞ்சாப் நிலைமை

இந்த ஐபிஎல் தொடரில், பிளே ஆஃப் தொடருக்கு இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் தகுதிப் பெற்றுவிட்ட நிலையில், மூன்றாம் மட்டும் நான்காம் இடத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது. மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இவ்விரண்டு இடங்களை பிடிக்க கடுமையாக போராடி வருகின்றன. இதில், பஞ்சாப் அணி 12 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று, புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது.

 22 வயது தங்கம்

22 வயது தங்கம்

இதில், ஒவ்வொரு போட்டியிலும் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருப்பவர் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங். 22 வயதே ஆன அர்ஷ்தீப் தான், தற்போதைய நிலவரப்படி பஞ்சாப் பவுலிங் யூனிட்டின் சூப்பர் ஸ்டார். அவரது பேஸ், ஸ்விங், யார்க்கர் என்று ஓவருக்கு 6 பந்துகளிலும் 6 வெரைட்டி வைத்துள்ளார். இந்த டோர்னமெண்ட்டில் பஞ்சாப் பெற்ற வெற்றிகளின் முக்கிய காரணமாக இருப்பவர் இந்த இளம் வேகப்பந்துவீச்சாளர் தான்.

 இந்திய அணியில் இடம்?

இந்திய அணியில் இடம்?

நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கூட 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி, பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப் இருப்பை உறுதி செய்துள்ளார். கடைசி நேரத்தில், குறிப்பாக டெத் ஓவர்களில் அவரது பந்துவீச்சில், டாப் கிளாஸ் தரமான பேட்ஸ்மேன்கள் கூட திணறுவது தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவரது பவுலிங் குறித்து சிலாகித்து பேசியுள்ள வீரேந்திர சேவாக் கூட, "அவர் [அர்ஷ்தீப்] ஜாகீர் கானிடம் மூன்று நாட்கள் பயிற்சி மேற்கொண்டார். ஆனால், அந்த மூன்று நாட்களில் ஜாகீரிடன் டிப்ஸ் கேட்டு அதை போட்டியில் துல்லியமாக Execute செய்ய முடிந்தால், அவர் இந்திய அணியில் சிறிது நேரம் செலவிட்டால், அவரால் எவ்வளவு திறமைகளை வெளிக்கொண்டு வர முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள். அப்படிப்பட்ட வீரர் அணியில் இல்லை என்றால், பிசிசிஐ அவரை கவனித்து அவருடைய திறமை வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அர்ஷ்தீப் மிகச்சிறந்த பந்து வீச்சாளர், அவர் தொடர்ந்து கடினமாக உழைத்து, இதுபோன்று செயல்பட்டால், அவர் நிச்சயம் ஒருநாள் இந்திய அணியில் தேர்வாவது உறுதி" என்று கூறியுள்ளார்.

 அசுர வளர்ச்சி

அசுர வளர்ச்சி

இதில் குறிப்பாக, அர்ஷ்தீப் மிகக் குறுகிய காலத்தில் இந்த உயரத்தை எட்டியிருக்கிறார். அவர் 2019ம் ஆண்டு தான் ஐபிஎல் தொடரில் விளையாட, பஞ்சாப் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அவர் தனது 20 வயதில் தான் அறிமுகமானார். ஜூன் 2021 இல், இலங்கைக்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, ஐந்து நெட் பந்துவீச்சாளர்களில் ஒருவராக அவர் தேர்வு செய்யப்பட்டார். இப்போது, அவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். உண்மையில் 2 வருடத்தில் இது அசுரத்தனமான வளர்ச்சி என்றே கூற வேண்டும்.

Story first published: Saturday, October 2, 2021, 19:16 [IST]
Other articles published on Oct 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+