Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC Final: "20 ஓவர்" நின்னுட்டா போதும்.. அந்த இயற்கையே நினைச்சாலும்.. 'ஹிட்மேனை' ம்ஹூம்

மும்பை: டெஸ்ட் கிரிக்கெட்டில் எத்தனையோ ரக வீரர்களின் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள். ஆனால், சில வீரர்கள் மட்டுமே பவுலர்களை முதலில் ஜாலியாக இருக்கவிட்டு, பிறகு எந்நேரம் பயத்திலேயே வைத்திருப்பார்கள். அதில் ஒருவர் ரோஹித் ஷர்மா.

கொரோனா பயத்தையும் மீறி, இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு வரும் ஜூன் 2ம் தேதி வண்டி (ஃபிளைட்) ஏறுகிறது. கோலி தலைமையில் செல்லும் அந்த படை, முதலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது. ஜூன் 18ம் தேதி இப்போட்டி தொடங்குகிறது.

பிறகு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துடன் மோதுகிறது. இவ்விரண்டு தனித்தனி தொடரிலும், ஓப்பனராக களமிறங்க உள்ளார் ரோஹித் ஷர்மா.

 என்ன செய்யப் போகிறீர்?

என்ன செய்யப் போகிறீர்?

அண்ணன் அடித்தால் அடி, இடித்தால் இடி, மிதித்தால் மிதி என்பதெல்லாம் ஒருநாள், டி20-களில் செல்லுபடியாகலாம். ஆனால், இது டெஸ்ட் தொடர். அதுவும் இங்கிலாந்து ஆடுகளம். அதுவும் டியூக் கிரேடு-1 பந்துகள் உங்களை நோக்கி சீறி வரும் போது, ஒரு ஓப்பனராக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை காண, ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.

 அஞ்சும் பவுலர்கள்

அஞ்சும் பவுலர்கள்

ரோஹித்தை பொறுத்தவரை ஷேவாக் பாணி தான் இவரதும் கூட. டி20, ஒருநாள், டெஸ்ட் என்று எந்த ரகமாக இருந்தாலும், முதலில் பொறுமையாக ஆடி, பின்பு விளாசுவது இவரது ஸ்டைல். டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக இதுவரை சாதிக்கவில்லை என்றாலும், இவர் எப்போதும் 'டேஞ்சரஸ்' வீரர் என்பதை எதிரணி பவுலர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். டெஸ்ட் போட்டிகளில் இவர் 20 ஓவர்கள் தாக்குப்பிடித்து நின்றுவிட்டால் போதும், பந்து பிறகு இவரது பேச்சைத் தான் கேட்கும்.

 பெஸ்ட் ஸ்கோர் 79

பெஸ்ட் ஸ்கோர் 79

வெளிநாடுகளில் இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 945 ரன்கள் எடுத்துள்ளார் ரோஹித். பெஸ்ட் ஸ்கோர் 79. ஆவரேஜ் 27.00. குறிப்பாக, இங்கிலாந்தில் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடியிருக்கிறார். இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 34 ரன்கள். இவரது சிறந்த ஸ்கோரான 79 இலங்கையில் அடித்தது தான். இப்படி இங்கிலீஷ் கண்டிஷன்களில் ஏகபோகமாக சொதப்பியிருக்கும் ரோஹித் தான் இப்போதும் ஓப்பனர்.

 ஒரே நம்பிக்கை

ஒரே நம்பிக்கை

ஆனால். இவர் மீதுள்ள ஒரேயொரு நம்பிக்கை, நாம் முன்பு சொன்ன அந்த '20 ஓவர் ஸ்டான்டிங்' தான். அப்படி மட்டும் நின்றுவிட்டால், பந்துகள் பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் செல்வதை எவராலும் தடுக்க முடியாது. இவ்வளவு ஏன்.. பேட்ஸ்மேன்களின் கான்ஃபிடன்ட்டை குலைப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கும், இங்கிலாந்தின் இருள் நிறைந்த மேகங்களால் கூட அவரை கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அவர் அந்த 20 ஓவர்கள் நிற்பது தான் கடினம். ஷேவாக்கை விட, வெளிநாடுகளில் குறைவான கன்சிஸிடண்ட் கொண்டிருக்கிறார். ஆனால், விட்டு விளாசுவார் என்ற நம்பிக்கையில் இவரையும் இங்கிலாந்து அழைத்துச் செல்கிறார் கோலி. அணி இவரிடம் எதிர்பார்ப்பது நீட் செஞ்சுரி அல்ல. எதிரணி பவுலர்களின் நம்பிக்கையை தொடக்கத்திலேயே சீர் குலைப்பது தான்.

Story first published: Saturday, May 29, 2021, 21:09 [IST]
Other articles published on May 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+