Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்ரேயாஸ், இசான் கிஷன் எதிர்காலம் என்ன? டி20 உலக கோப்பைக்கு கிடையாதா? இந்திய அணிக்கு திரும்புவாங்களா?

மும்பை : பிசிசிஐ ஆண்டு ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரேயாஸ் மற்றும் இசான் கிஷனை அதிரடியாக நீக்கி இருக்கிறது. இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் ஐபிஎல் தொடருக்காக இரு வீரர்களும் தயாராகி வந்தது தான் தற்போது பிரச்சனைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் பிசிசிஐயின் எச்சரிக்கை மீறியும் இரு வீரர்களும் ரஞ்சி போட்டியில் விளையாடவில்லை. இதனால் இருவரும் தற்போது அதிரடியாக பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் டி20 உலக கோப்பை நடைபெறுகிறது. மேலும் இந்திய அணி அடுத்தடுத்து பல்வேறு தொடர்களில் விளையாட உள்ளது. இதனால் ஸ்ரேயாஸ் மற்றும் இசான் கிஷன் ஆகியோர் அடுத்த 12 மாதத்திற்கு இந்திய அணிக்கு தேர்வாக மாட்டார்களா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

will Shreyas iyer and ishan kishan selected for indian cricket team again- Rules Explained

ஒரு ஆண்டுக்கு கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை என்றால் இரு வீரர்களின் பாதிக்கப்படும் என்றும் சிலர் கவலை தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் இதில் பிசிசிஐ ரூல்ஸ் என்ன சொல்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். ஊதிய ஒப்பந்தத்தில் இல்லாத வீரர்களை அணியில் சேர்க்கக்கூடாது என்ற எந்த ஒரு விதியும் கிடையாது. ஊதிய ஒப்பந்தத்தில் இல்லாத பல வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக ரிங்கு சிங், ரவி பிஸ்னாய், ஜிதேஷ் சர்மா போன்ற வீரர்கள் எல்லாம் கடந்த சில மாதங்களாக இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் தற்போது தான் ஊதிய ஒப்பந்தத்தில் இணைந்திருக்கிறார்கள். இதன் காரணமாக ஊதிய ஒப்பந்தத்தில் இல்லை என்பதற்காக ஸ்ரேயாஸ்,இசான் கிஷனும் இந்திய அணிக்கு திரும்ப முடியாது என்று கிடையாது. ஆனால் பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கும் பட்சத்தில் இரண்டு வீரர்களும் வேண்டுமென்றே அணியில் தேர்வு செய்யப்படாமல் இழுத்து அடிக்க படலாம்.

இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிசன் இனி நாங்கள் சரியாக ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடுகிறோம் என்று ஒரு மன்னிப்பு கடிதத்தையோ இல்லை விளக்க கடிதத்தையோ பிசிசிஐக்கு அனுப்பினால் நிச்சயமாக அவர்கள் இந்திய அணியில் சேர்த்துக் கொள்ளப்படு வார்கள். விதிப்படி ஊதிய ஒப்பந்தத்தில் இல்லை என்றாலும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்திய அணிக்காக விளையாடலாம் என்பதால் ஸ்ரேயாஸ், இசான் கிஷன் ரசிகர்கள் வருத்தப்பட தேவையில்லை.

Story first published: Thursday, February 29, 2024, 8:30 [IST]
Other articles published on Feb 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+