Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நிதினின் சம்பவம் முதல் ஜட்டுவின் தாக்கம் வரை.. பல ட்விஸ்டுடன் முடிந்த முதல் நாள்.. தப்புமா இந்தியா!

இந்தூர்: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில் முதல் நாளன்றே இந்திய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. விக்கெட்கள், பிட்ச் மாற்றம் என பல சுவாரஸ்ய சம்பவங்களுடன் முடிந்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

என்னதான் டாஸில் வெற்றி கண்டு சாதகமான முடிவை எடுத்துக்கொண்டாலும், இந்திய அணிக்கு பேட்டிங் சாதகமாக இல்லை. ஏனென்றால் 109 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

சுவாரஸ்ய நிகழ்வு

சுவாரஸ்ய நிகழ்வு

ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் சிக்கி ரோகித் 2 முறை அவுட்டானார். முதல் முறை எட்ஜ் கேட்ச்சான போதும் சரி, எல்.பி.டபள்யூ ஆன போதும் நடுவர் நிதின் மேனன் நாட் அவுட் எனக்கூறி அதிர்ச்சி கொடுத்தார். எனினும் ரோகித் அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அவர் 12 ரன்களுக்கும், சுப்மன் கில் 21 ரன்களுக்கும் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

மிடில் ஆர்டர் சரிவு

மிடில் ஆர்டர் சரிவு

இதன் பின்னர் வந்த சட்டீஸ்வர் புஜாரா (1), ஜடேஜா (4), ஸ்ரேயாஸ் ஐயர் (0), கே.எஸ்.பரத் (17) என அனைவருமே சொதப்பினர். எப்படியாவது இந்திய அணியை சரிவில் இருந்து மீட்க வேண்டும் என போராடிய விராட் கோலி கூட 22 ரன்களுக்கெல்லாம் நடையை கட்டினார். இதனால் 88 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து இந்தியா பரிதாபமாக இருந்தது. அப்போது வந்த உமேஷ் யாதவ் 17 ரன்களை அடித்து 109 என்ற டீசண்டான ஸ்கோருக்கு கொண்டு சென்றார்.

ஆஸி, இன்னிங்ஸ்

ஆஸி, இன்னிங்ஸ்

மிக குறைந்த ஸ்கோரை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜடேஜாவே உதவியாக இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா?. அவர் வீசிய ஓவரில் ஆஸ்திரேலிய ஓப்பனர் டிராவிஸ் ஹெட் 9 ரன்களுக்கு அவுட்டாகிவிட்டார் தான். ஆனால் 2வது விக்கெட்டில் தவறு செய்தார். மார்னஸ் லபுசாக்னேவை 4வது ஓவரிலேயே அவுட்டாக்கினார். ஆனால் அது நோ பால் என அறிவித்துவிட்டனர். இதனால் லபுசாக்னே - உஸ்மான் கவாஜா ஜோடி மட்டும் முதல் விக்கெட்டிற்கு 96 ரன்களை குவித்தனர்.

 பதிலடி தந்த ஜடேஜா

பதிலடி தந்த ஜடேஜா

எனினும் ஜடேஜாவே தனது தவறை சரி செய்துக்கொடுத்தார். டிராவிஸ் ஹெட், கவாஜா, மார்னஸ், ஸ்டீவ் ஸ்மித் என ஆஸ்திரேலியாவின் டாப் 4 வீரர்களையும் ஜடேஜாவே வீழ்த்தினார். இதனால் முதல் நாளின் முடிவில் அந்த அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 156 ரன்களை குவித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட 47 ரன்கள் முன்னிலையுடன் உள்ளன.

Story first published: Wednesday, March 1, 2023, 17:54 [IST]
Other articles published on Mar 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+