Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மைதானத்தில் குவியும் சஞ்சு சாம்சன் ஃபேன்ஸ்.. 3வது போட்டியில் வாய்ப்பு? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

நேப்பியர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடக்கவுள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டம் மழையால் ரத்தான நிலையில், 2வது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதனால் கடைசி போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரை கைப்பற்றிவிடும். ஆனால் 3வது டி20 போட்டியை வென்று தொடரை சமன் செய்ய நியூசிலாந்து அணி தீவிர முயற்சி மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு?

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு?

இதனிடையே டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி அடைந்த தோல்வி காரணமாக இந்திய அணியில் சீனியர் வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பேசப்பட்டு வருகிறது. அதற்கேற்ப தொடக்க வீரர்களாக ரிஷப் பன்ட் - இஷான் கிஷன் ஆகியோர் கடந்த போட்டியில் களமிறக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர்.

 உம்ரான் மாலிக்

உம்ரான் மாலிக்

அதேபோல் மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ், ஹூடா ஆகியோர் விளையாடினர். ஏற்கனவே இரு விக்கெட் கீப்பர்கள் அணியில் இருப்பதால், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேபோல் ஐபிஎல் தொடரில் அதிக வேகம் வீசி கவனம் ஈர்த்த உம்ரான் மாலிக்கிற்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

சஞ்சு சாம்சன் ரசிகர்கள்

சஞ்சு சாம்சன் ரசிகர்கள்

டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்டிருந்தார். இருந்தும் இந்த டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் சஞ்சு சாம்சனுக்கு நாளுக்கு நாள் உலகம் முழுவதும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த போட்டியில் கூட சஞ்சு சாம்சன் புகைப்படங்களுடன் ஏராளமான ரசிகர்கள் மைதானங்களில் குவிந்தனர்.

என்ன சொல்கிறார் ஹர்திக்?

என்ன சொல்கிறார் ஹர்திக்?

இதனிடையே சஞ்சு சாம்சன் மற்றும் உம்ரான் மாலிக் உள்ளிட்ட வீரர்களுக்கு 3வது டி20 போட்டியில் வாய்ப்பு வழங்கப்படுமா என்று இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஹர்திக் பாண்டியா கூறுகையில், இந்திய அணியில் மாற்றம் செய்யப்படுமா என்று தெரியவில்லை. புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால் ஒரு போட்டி மட்டுமே உள்ளது. அதனால் அடுத்தப் போட்டியில் மாற்றம் இருக்க அதிக வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.

Story first published: Monday, November 21, 2022, 23:24 [IST]
Other articles published on Nov 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+