
சிறந்த ஆட்டம்
வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் பயிற்சி ஆட்டங்களில் மணிஷ் பாண்டேவும், ஸ்ரேயாஸ் அய்யரும் சிறப்பாகவே செயல்பட்டனர். பிறகு, ஐபிஎல்லிலும் அசத்தி, தேர்வுக்குழுவை கவர்ந்தனர். பலமுறை அணிக்குள் தேர்வு செய்யப்பட்டும், பெஞ்சிலேயே உட்கார வைக்கப்பட்டனர்.

விளையாட வாய்ப்பில்லை
கடைசியாக கடந்த நவம்பரில் மணிஷ் பாண்டேவும், பிப்ரவரி மாதம் ஸ்ரேயாஸ் அய்யரும் இந்திய அணியில் இடம் பெற்றனர். இருவரும் அதன்பின் இந்திய அணியில் விளையாடவில்லை. பேட்டிங் வரிசையில் மூத்த வீரர்கள் வலுவாக உள்ளதால், வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

யாருக்கு சான்ஸ்?
6வது வீரராக ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது தெரியவில்லை. காரணம், ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஜடேஜா, கருணால் பாண்டியா இருப்பதால் ஸ்ரேயாஸ் அய்யர், பாண்டே இருவரின் இடத்துக்கும் போட்டி நிச்சயம். பந்துவீச்சிலும் இளம் வீரர்கள் இடம்பிடிக்கும் வாய்ப்புகள் குறைவே.

கடினமாக இருக்கும்
டி 20 போட்டி தொடரில் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் தான். எனவே, இந்த தொடர் கடினமாக இருக்கும். வெஸ்ட் இண்டீஸ் நிச்சயம் விட்டுக் கொடுக்காது. எனவே, கடும் போட்டிக்கு இடையே இளம் வீரர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு விளையாட வேண்டும்.


Click it and Unblock the Notifications











