Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சின்னதாக "சீன்" காட்டி வீழ்ந்த வில்லியம்ஸ்!

கான்பெரா: மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஆட்டத்தின் போது ஜிம்பாப்வேவின் சீன் வில்லியம்ஸ்தான் கொஞ்சம் சீன்போட்டு மிரட்டியவர் எனலாம். அவரை சதமெடுக்கவிடாமல் தடுத்து அவுட் ஆக்கிய போதுதான் மேற்கிந்திய தீவு வீரர்கள் நிம்மதியடைந்தனர்.

ஜிம்பாப்வேயுடனான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் ஸ்மித் முதல் ஓவரின் 2வது பந்தில் டக் அவுட் ஆனார்.

Williams dismissed for 76 by Jason Holder against West Indies

ஆனாலும் கெய்ல்- சாமுவேல்ஸ் ஜோடி ஜிம்பாப்வே பந்துகளை பிரித்து மேய்ந்து சரித்திர சாதனைகள் பலவற்றை நிகழ்த்திவிட்டது. அத்துடன் ஜிம்பாப்வே வெல்ல 373 என்ற இமாயல இலக்கையும் நிர்ணயித்தது.

எங்க ஜிம்பாப்வே சாதிக்கப் போகுது என்பதற்கேற்ப அந்த அணியின் வீரர்கள் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் வீழ்ந்துவந்தனர். ஆனால் டெய்லர்- சீன் வில்லியம்ஸ் ஜோடி கொஞ்சம் நிலைத்து ஆடி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு குடைச்சலை கொடுத்தது.

அதுவும் வில்லியம்ஸ் அதிரடியாக ஆடினார். 39 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதில் 6 பவுண்டரிகளும் அடங்கும். இது ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்த 19வது அரை சதமாகும்.

பின்னர் தடதடவென ரன்களைக் குவித்து சதத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்த வில்லியம்ஸ் 76 ரன்கள் எட்டிய நிலையில் ஹோல்டர் பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போதுதான் மேற்கிந்திய தீவுகள் அணி நிம்மதி அடைந்தது.

சிறிது நேரம் நிலைத்து ஆடினாலும் மேற்கிந்திய தீவுகள் அணியை கலக்கிவிட்டார் வில்லியம்ஸ் என்பதுதான் நிதர்சனம்!!

Story first published: Tuesday, February 24, 2015, 16:27 [IST]
Other articles published on Feb 24, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+