Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிக்சர் மழை பொழிந்த ரோஹித்.. ஃபினிஷிங்கில் அசத்திய டிகே.. தோல்விக்கு பதிலடி கொடுத்த இந்தியா!

நாக்பூர்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

Recommended Video

IND vs AUS 2nd T20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி *Cricket

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் ஈரப்பதம் அதிகம் இருந்ததால், டாஸ் போடுவதில் 2 மணி நேரத்திற்கும் மேலாக தாமதம் ஏற்பட்டது. இதன்பின்னர் ஆட்டம் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், இரு அணிகளுக்கும் 2 ஓவர்கள் பவர் ப்ளே என்று அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்திய அணி அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார் ஆகியோர் நீக்கப்பட்டு, பும்ரா, ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, மேத்யூ வேட் மற்றும் ஆரோன் ஃபின்ச்சின் அபாரமான ஆட்டத்தால் 8 ஓவர்களுக்கு 90/5 ரன்கள் சேர்த்தது.

தொடக்கமே அசத்தல்

தொடக்கமே அசத்தல்

இதனைத்தொடர்ந்து 91 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, ரோஹித் ஷர்மா - கேஎல் ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆஸி. அணி தரப்பில் நம்பர் ஒன் டி20 பவுலரான ஹேசல்வுட் வீசினார். அந்த ஓவரிலேயே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 2 சிக்சர்களும், கேஎல் ராகுல் ஒரு சிக்சரும் விளாசினர்.

கேஎல் ராகுல் அவுட்

கேஎல் ராகுல் அவுட்

தொடர்ந்து கம்மின்ஸ் வீசிய 2வது ஓவரிலும் ரோஹித் அதிரடியை தொடர, அந்த ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் சேர்த்தது. பின்னர் மூன்றாவது ஓவரை சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஷாம்பா வீச, கேஎல் ராகுல் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் 4வது ஓவரில் விராட் கோலி - ரோஹித் ஷர்மா தலா ஒரு பவுண்டரி விளாசி இந்திய அணியின் ஸ்கோரை 51ஆக உயர்த்தினர்.

ஷாம்பாவால் பரபரப்பு

ஷாம்பாவால் பரபரப்பு

இப்படியே சென்றால் இந்திய அணி எளிதாக வெற்றிபெற்றுவிடும் என்று நினைக்க, ஆடம் ஷாம்பா வீசிய 5வது ஓவரில் ட்விஸ்ட் ஏற்பட்டது. சிறப்பாக ஆடிய கோலி 11 ரன்களிலும், நல்ல ஃபார்மில் இருந்த சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மைதானத்தில் இருந்த மொத்த சத்தமும் அமைதியானது.

முக்கிய நேரத்தில் ஹர்திக் அவுட்

முக்கிய நேரத்தில் ஹர்திக் அவுட்

5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி மூன்று ஓவர்களில் 33 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், 6வது ஓவரில் ரோஹித் ஷர்மாவின் அதிரடியால் 11 ரன்கள் எடுக்கப்பட்டது. தொடர்ந்து 7வது ஓவரை வீச கம்மின்ஸ் அழைக்கப்பட, ஹர்திக் பாண்டியா ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார். அந்த ஓவரிலேயே ஆட்டத்தை முடிக்க நினைத்து ஹர்திக் சிக்சர் அடிக்க முயற்சிக்க, டாப் எட்ஜாகி 9 ரன்களில் ஃபின்ச்சிடம் கேட்ச் ஆனார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

7 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 82 ரன்கள் எடுக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடைசி ஓவரை வீச அப்பாட் அழைக்கப்பட, தினேஷ் கார்த்திக் முதல் பந்தை சந்தித்தார். அந்தை பந்தை பேக்வெர்ட் ஸ்கொயர் லெக் திசையில் சிக்சராக விளாசி அசத்தினார்.

தினேஷ் கார்த்திக் ஃபினிஷிங்

தினேஷ் கார்த்திக் ஃபினிஷிங்

தொடர்ந்து அடுத்த பந்தை டீப் மிட் விக்கெட்டை திசையில் பவுண்டரி விளாசி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியாக இந்திய அணி 7.2 ஓவர்களில் 92 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற இந்திய அணி சமன் செய்துள்ளது.

Story first published: Friday, September 23, 2022, 23:32 [IST]
Other articles published on Sep 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+