Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லாதால் ஐபிஎல்லில் ஆர்வம் காட்டாத தமிழக ரசிகர்கள்!

சென்னை: இந்தியன் பிரிமியர் லீக் எனும் ஐபிஎல் போட்டிகளில் இந்த ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடம்பெறவில்லை. இதனால் தமிழக ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

2013ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நிகழ்ந்த சூதாட்டம் மற்றும் கடும் ஊழல் புகார்கள் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லாத ஐபிஎல்லில் தமிழக ரசிகர்கள் ஆர்வம் காட்டாவில்லை. இருப்பினும் அடுத்த ஆண்டு அசுர பலத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் தமிழக ரசிகர்கள் அதனை இப்போதே கொண்டாடி வருகின்றனர். #சிஎஸ்கே என டிவிட்டரில் டிரெண்டிங்கும் செய்து வருகின்றனர்.

மிஸ் யு சிஎஸ்கே

சிஎஸ்கே எங்களின் தோல், நாங்கள் ஒரு குடும்பம், சிஎஸ்கே ஒரு டீம் மட்டுமல்ல என்றும் நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியை மிஸ் பண்ணுவதாகவும் சமூக வலைதளங்களில் தெரிவத்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடருக்கே கிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடருக்கே கிங் என ரசிகர்கள் டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

யாராலும் முடியாது

தல தளபதி என நடிகர் விஜயையும் தோனியையும் மிக்ஸாக்கி போட்டோவை வெளியிட்டுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இவர்கள் இருவரையும் யாராலும் அடித்துக்கொள்ள முடியாது என சொல்லாமல் சொல்கின்றனர்.

சூப்பர் கிங்ஸின் பெருமைகள்

8 ஐபிஎல் போட்டிகளில் அரையிறுதி வரை சென்ற அணி, 5 ஐபிஎல் போட்டிகளில் ரன்னர் - அப், இரண்டு ஐபிஎல் போட்டிகளில் சாம்பியன், சாம்பியன்ஸ் லீக்கில் 2 முறை சாம்பியன் என சென்னை சூப்பர் கிங்ஸின் பெருமைகளை சொல்லியுள்ளார் இந்த நெட்டிசன்..

ஐபிஎல்லை புறக்கணிக்கிறோம்

சிஎஸ்கே இல்லாமல் ஐபிஎல் இல்லை. ஐபிஎல்லை புறக்கணிக்கிறோம்.. அடுத்த வருடைம் நாங்கள் திரும்பி வருவோம்.. தொட்டுப்பார்க்க துணிச்சல் கொள்ளுங்கள்.. சிஎஸ்கேதான் ஐபிஎல்லின் கிங்... என் பதிவிட்டுள்ளார் இந்த ரசிகர்..

ஒரு மீம் போது சொல்றதுக்கு

அவர்கள் நல்ல ஜம்பர்கள், அவர்கள் நல்ல ரன்னர்ஸ், நல்லா ஃபீல்டிங்கும் தெரிஞ்சவங்க.. எல்லா மேட்சையும் கடைசி ஓவர் வரை கொண்டு சென்று விண் பண்ணிருக்காங்க என ஒரு மீம்லயே சிஎஸ்கே பத்தி சொல்லிட்டாங்க...

ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்..

ஐபிஎல்லின் கிங் சிஎஸ்கேவுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்... 2018ல் கொண்டாடுவோம் என இப்போதே தயாராகி விட்டார் இந்த கிரிக்கெட் ரசிகை...

இதை விட வேற என்ன வேனும்

எப்போது சிஎஸ்கேவும் மற்ற அணிகளும் விளையாடும் போது இந்தியாவின் பெரும்பாலான பகுதி சிஎஸ்கே அணியின் யூனிபார்மான மஞ்சல் நிறத்தில்தான் இருக்கும்.. இதை விட வேற என்ன வேனும்.. விசில் போடு என போட்டுள்ளார் இந்த ரசிகர்..

Story first published: Wednesday, April 5, 2017, 22:53 [IST]
Other articles published on Apr 5, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+