Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எந்த இடத்தில வேணும்னாலும் எந்த இடத்தில வேணும்னாலும் இறங்க சொல்லுங்க... நான் தயார்.கெயிலின் ஓபன் டாக்

வெஸ்ட் இண்டீஸ்: நீண்ட நாட்களுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்றுள்ள கிறிஸ் கெயில் கூறியுள்ள வார்த்தைகள் ரசிகர்களுக்கு புது நம்பிக்கை அளித்துள்ளது.

2019ம் ஆண்டுக்கு பிறகு மேற்கிந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படாமல் இருந்த கிறிஸ் கெயிலுக்கு அடுத்து நடைபெறவிருக்கு இலங்கை தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ் கெயில் மீண்டும் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் தெரிவித்துள்ள வார்த்தைகள் நம்பிக்கை அளித்துள்ளது.

சுற்றுப்பயணம்

சுற்றுப்பயணம்

இலங்கை கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது. முதல் டி20 மார்ச் 3-ஆம் தேதியும், அடுத்த போட்டி 5ம் தேதியும், கடைசி ஆட்டம் 7-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன. இந்த 3 ஆட்டங்களுமே ஆன்டிகுவா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மீண்டும் கெயில்

மீண்டும் கெயில்

இந்தத் தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியில் 41 வயதான கிறிஸ் கெயில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல், பாகிஸ்தான் சூப்பா் லீக் டி20 தொடர் ஆகியவற்றில் சிறப்பாக ஆடியதன் மூலம் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் 2 ஆண்டுகளுக்கு பின் இடம்பெற்றுள்ளார். டி20 உலகக்கோப்பைக்கு அந்த அணி தயாராவதால், கெயிலுக்கு உலகக்கோப்பையிலும் வாய்ப்பு வழங்கப்படலாம்.

பொசிஷன்

பொசிஷன்

இது குறித்து பேசியுள்ள கிறிஸ் கெயில், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் கும்ப்ளே என்னிடம் 3வது வீரராக களமிறங்க கூறினார். இதனால் நான் 3வது வீரராக களமிறங்கி சிறப்பாக ஆடுகிறேன். ஸ்பின்னர்களுக்கு எதிராக ஆடுவது எனக்கு எளிது தான். எனவே இலங்கை தொடரில் என்னை எங்கு களமிறக்கினாலும் நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.

நம்பிக்கை

நம்பிக்கை

நான் என்னால் முடியும் வரை கிரிக்கெட் ஆடுவேன். எனக்கு இலங்கை தொடருக்காக அழைப்பு வந்த போது, நான் உடனடியாக சரி என்று கூறிவிட்டேன். என் இதயம் அதைதான் தேடுகிறது. நான் அடுத்து வரும் ஐபிஎல், உலகக்கோப்பை டி20 தொடர் என அனைத்திலும் பங்கேற்பேன். மேற்கு இந்திய தீவுகள் அணி இந்த முறை கண்டிப்பாக டி20 தொடரை வெல்லும் என கிறிஸ் கெயில் தெரிவித்தார்.

Story first published: Tuesday, March 2, 2021, 18:45 [IST]
Other articles published on Mar 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+