
குழப்பம்
இந்தியாவில் ஏலம் நடக்கும் போது நியூசிலாந்தில் இரவு 10.30 மணியாகும். அப்போது, தான் ஆர்.சி.பி அணியால் ரூ.15 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டதை பார்த்தேன். எனக்கு அந்த இரவு முழுவதும் ரூ.15 கோடி டாலரில் எவ்வளவு கிடைக்கும் என யோசித்ததாக தெரிவித்துள்ளார்.

வங்கி கணக்கு
ஒரே இரவில் எனது வங்கி கணக்கின் மதிப்பு மாறியது. நியூசிலாந்து வீரர்கள் ட்ரீட் கேட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த கெயில் ஜேமிசன், அவர்களுக்கு நல்ல காபி மற்றும் மதுபானம் வாங்கி கொடுப்பேன் எனத் தெரிவித்தார்.

அறிமுகம்
26 வயதாகும் கெயில் ஜேமிசன், கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இதுவரை வெறும் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுகளை எடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவரின் பவுலிங் சாராசரி 13.27 ஆக உள்ளது.

அனுபவமே இல்லை
ஐபிஎல்-ல் கிறிஸ் மோரிஸுக்கு பிறகு அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட வீரரான கெயில் ஜேமின்சன் இதுவரை 4 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே பங்கேற்று 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரின் டி20 பவுலிங் எகனாமி 7.75 ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications











