மும்பை : 2024 மகளிர் பிரிமியர் லீக் தொடருக்கான மினி ஏலத்தில் 2 கோடி வரை ஏலத் தொகை எகிறியது. இந்த ஏலத்தில் சர்வதேச போட்டிகளில் இன்னும் அறிமுகம் கூட ஆகாத இந்திய வீராங்கனை காஷ்வி கவுதம் 2 கோடிக்கு வாங்கப்பட்டு வரலாறு படைத்தார்.
குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 2 கோடி ரூபாய் கொடுத்து காஷ்வி கவுதமை அணியில் சேர்த்தது. மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் சர்வதேச போட்டிகளில் ஆடி இராத வீராங்கனை ஒருவருக்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச விலை இதுதான்.
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் அன்னாபெல் சதர்லேண்ட்-ஐ டெல்லி கேப்பிடல்ஸ் 2 கோடி கொடுத்து வாங்கியது. மும்பை இந்தியன்ஸ் அணியுடன் போட்டி போட்டு டெல்லி அணி சார்பில் ஏலத்தில் பங்கேற்ற சவுரவ் கங்குலி அவரை ஏலத்தில் வென்றார்.

ஆஸ்திரேலிய வீராங்கனை ஃபோப் லிட்ச்ஃபீல்ட்-ஐயும் 1 கோடிக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியது. இலங்கை அணித்தலைவர் சாமரி அட்டபட்டு மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் டெண்ட்ரா டோட்டின் ஆகியோரை ஏலத்தில் யாரும் வாங்காதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த ஏலத்தில் ஐந்து அணிகளும் வாங்கிய வீராங்கனைகள் பட்டியல் -
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஜார்ஜியா வேர்ஹாம்- 40 லட்சம், கேட் கிராஸ்- 30 லட்சம், ஏக்தா பிஷ்ட்- 60 லட்சம், சுபா சதீஷ்- 10 லட்சம்), எஸ். மேகனா- 30 லட்சம், சிம்ரன் பகதூர்- 30 லட்சம், சோஃபி மோலினக்ஸ்- 30 லட்சம்
குஜராத் ஜெயண்ட்ஸ்: ஃபோப் லிட்ச்ஃபீல்ட் - 1 கோடி, மேக்னா சிங் - 30 லட்சம், த்ரிஷா பூஜிதா - 10 லட்சம், காஷ்வி கவுதம் - 2 கோடி, பிரியா மிஸ்ரா - 20 லட்சம், லாரன் சிட்டில் - 30 லட்சம், கேத்தரின் பிரைஸ் - 10 லட்சம், மன்னாத் காஷ்யாப் 10 லட்சம் , வேதா கிருஷ்ணமூர்த்தி - 30 லட்சம், தர்னம் பதான் - 10 லட்சம்
உபி வாரியர்ஸ்: விரிந்தா தினேஷ்- 1.3 கோடி, டேனியல் வியாட்- 30 லட்சம், கவுஹர் சுல்தானா- 30 லட்சம், பூனம் கெம்னார்- 10 லட்சம், சைமா தாக்கூர்- 10 லட்சம்
மும்பை இந்தியன்ஸ்: ஷபனீம் இஸ்மாயில் - 1.20 கோடி, அமன்தீப் கவுர் - 10 லட்சம், எஸ். சஞ்சனா - 15 லட்சம், பாத்திமா ஜாபர் - 10 லட்சம், கீர்த்தனா பாலகிருஷ்ணன் - 10 லட்சம்
டெல்லி கேபிடல்ஸ் : அன்னபெல் சதர்லேண்ட் - 2 கோடி, அபர்ணா மண்டல் - 10 லட்சம், அஸ்வனி குமாரி - 10 லட்சம்