Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மோசடி! யாரு விளையாடுறான்னே தெரியாமல்.. ஐபிஎல் டிக்கெட் வாங்க காத்திருந்த சென்னை பெண்கள்

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது. டிக்கெட்டுகளை வாங்க நேற்று முன் தினம் இரவில் இருந்தே பலரும் லைனில் கால் கடுக்க கத்திருந்தனர்.

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 31 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் 7 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. சென்னையில் முதல் போட்டி ஏப்ரல் 3-ந்தேதி நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. இதற்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது.

கட்டுங்கடங்காத கூட்டம்

கட்டுங்கடங்காத கூட்டம்

ரூ.1,500, ரூ.2,000, ரூ.2,500 ஆகிய விலைகளில் டிக்கெட் நேரடியாக கவுண்டர்களில் விற்பனை செய்யப்பட்டன. இதே போல் ரூ.2,000, ரூ.2,500, ரூ.3,000 ஆகிய விலைகளின் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனையானது. இந்த டிகெட்டுகள் வெறும் 15 நிமிடங்களில் விற்று காலியானது. முன்னதாக மைதானத்தில் அமைக்கப்பட்டு கவுண்டர்களில் விற்பனை செய்யப்பட்டது. இந்த டிக்கெட்டுகளை வாங்குவதற்காக இரவில் இருந்தே ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.

 நீண்ட நேரம் காத்திருந்து

நீண்ட நேரம் காத்திருந்து

இளம் ரசிகர்கள் பலரும் இரவில் இருந்தே லைனில் காத்திருந்தனர். எப்படியும் மறுநள் காலை வரை காத்திருக்க வேண்டும் என்று முன்னேற்பாடாக வந்த பல ரசிகரக்ள் பெட்ஷீட், வாட்டர் பாட்டில்,நொறுக்குத்தீனிகளுடன் வரிசையில் நின்றனர். ரசிகர்கள் வரிசையில் நின்று டிக்கெட் வாங்க ஏதுவாக கம்புகளால் தடுப்புகளும் அமைக்கப்பட்டு இருந்தன. இதனால் பலரும் கம்புகள் மீதும் சாய்ந்தவாறும், கம்புகளின் மீது ஏறி அமர்ந்த படியும் என இரவின் நேரத்தை எண்ணி எண்ணி கழித்துக் கொண்டு இருந்தனர்.

 என்னவென்று தெரியாமலேயே..

என்னவென்று தெரியாமலேயே..

பலரும் ஹெட் செட் கையுமாக அமர்ந்துகொண்டு பிடித்த படங்களை பார்த்து இரவு பொழுதை கழிப்பதையும் காண முடிந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் வரிசையில் காத்திருந்த நிலையில், இறுதியில் சுமார் 500 பேருக்கு டிக்கெட் எதுவும் கிடைக்காமல் போனது. இதனால் பெருத்த ஏமாற்றத்துடனும் சோகத்துடன் ரசிகர்கள் திரும்பி சென்றதை காண முடிந்தது. உண்மையிலேயே சென்னை அணியின் கேப்டன் டோனியை பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் பல ரசிகர்கள் காத்திருந்த நிலையில், கிரிக்கெட் என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு கிரிக்கெட் ஞானம் கொண்ட பலரும் லைனில் காத்திருந்தனர்.

எந்த அணிகளுக்கு இடையே மேட்ச் நடக்குது

எந்த அணிகளுக்கு இடையே மேட்ச் நடக்குது

இந்த டிக்கெட்டுகளை வாங்கி வைத்துக்கொண்டு மேட்ச் நடக்கும் தினத்தில் பிளாக்கில் விற்பதற்காகவே சிலர் லைனில் விடிய விடிய காத்திருந்துள்ளனர். குறிப்பாக கிரிக்கெட் என்றால் என்ன என்று தெரியாத பல பெண்களும் நின்றனர். அவர்களிடம் எந்த அணிகளுக்கு இடையே மேட்ச் நடக்கிறது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு தலையை சொறிந்து கொண்டு திரு திருவென முழித்ததையும் காண முடிந்தது.

கிரிக்கெட் பற்றியே தெரியாமல்..

கிரிக்கெட் பற்றியே தெரியாமல்..

அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யாரை பிடிக்கும் என்று கேட்ட போது டெண்டுல்கர் என்று கூறி அங்கிருந்தவர்களை ஒரு நிமிடம் ஷாக் அடைய வைத்தார். கிரிக்கெட் பற்றியே தெரியாமல் இரவு முழுக்க நின்று எதற்காக என்றால் பிளாக்கில் டிக்கெட் விற்கத்தான். நேரடி முறையில் தான் இப்படி டிக்கெட்டுகளை வாங்கி வைத்துக் கொண்டு பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது என்றால், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் பிளாக் டிக்கெட்டு விற்பனை படு ஜோராக நடப்பதாகவும் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் புகார் கூறியுள்ளனர்.

Story first published: Tuesday, March 28, 2023, 16:50 [IST]
Other articles published on Mar 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+