
புரட்சிகரமான தொடக்கம்
இது தொடர்பாக ஜெய்ஷா வெளியிட்டுள்ள பதிவில், முதல் மகளிர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான ஏலம் நடைபெற்றது. இது 2008 ஆம் ஆண்டு ஆடவருக்கான முதல் சீசனுக்கு கிடைத்த பணத்தைவிட தற்போது அதிகமாக கிடைத்துள்ளது. மொத்தமாக பிசிசிஐக்கு 4669 கோடியே 99 லட்சம் ரூபாய் ஏலத்தின் மூலம் கிடைத்திருக்கிறது. மகளிர் கிரிக்கெட்டில் புதிய புரட்சிகரமான தொடக்கமாக நான் இதைப் பார்க்கிறேன்.

சிறந்த நாள்
மகளிர் கிரிக்கெட் தலை எழுத்தை மாற்றும் புதிய பாதையாக மகளிர் ஐபிஎல் இருக்கும் என நான் நம்புகிறேன். இது மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொட்ட விளையாட்டு துறைக்கும் இது சிறந்த நாளாகும். மகளிர் கிரிக்கெட்டில் நாம் செய்ய வேண்டிய மாற்றங்களை மகளிர் ஐபிஎல் மேற்கொள்ளும். மகளிர் ஐ பி எல் பங்கேற்கும் அனைத்து தரப்பினருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

அதானி நிறுவனம்
இந்த மகளிர் ஐ பி எல் ஐ மகளிர் பிரீமியர் லீக் என்று பிசிசிஐ பெயர் சூட்டி இருக்கிறது. வரலாற்றுப் பயணம் இன்றுடன் தொடங்குகிறது என்று ஜெய்ஷா குறிப்பிட்டுள்ளார். இந்த ஏலத்தில் மொத்தம் 16 நிறுவனங்கள் பங்கேற்றது. இதில் அதிகபட்சமாக அதானி நிறுவனம் அகமதாபாத் அணியை 1289 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. இதன் அடுத்தபடியாக மும்பையை மையமாக வைத்து இந்தியா வின் ஸ்போர்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் 912 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் வென்றிருக்கிறது.

ஆர்சிபி அபாரம்
பெங்களூரை மையமாகக் கொண்ட அணியை ஆர்சிபி நிறுவனம் 900 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. இதேபோன்று டெல்லி அணியை 810 கோடி ரூபாய் கொடுத்து ஜே எஸ் டபிள்யூ ஜி எம் ஆர் கிரிக்கெட் நிறுவனம் வாங்கியிருக்கிறது. லக்னோ அணியை 757 கோடி ரூபாய் கொடுத்து கேப்ரி குளோபல் ஹோல்டிங் பிரைவேட் நிறுவனம் வாங்கி இருக்கிறது.

சென்னை அணி இல்லை
இந்த ஏலத்தில் ஆர் சி பி ஐ தவிர மற்ற எந்த ஐபிஎல் அணியும் மகளிர் அணியை வாங்காதது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோன்று இந்த மகளிர் ஐபிஎல் தொடரில் தமிழகத்தை மையமாகக் கொண்டு எந்த அணியும் இல்லாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த மகளிர் ஐ பி எல் ஐ 2027 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பு செய்ய ஜியோ நிறுவனம் 950 கோடி ரூபாய் கொடுத்து ஒளிபரப்பு உரிமத்தை வாங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











