Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4வது டெஸ்ட்ல பிட்ச் எப்படி இருக்கும்னு பாக்க ஆவலா இருக்கு... களத்தில் இறங்கிய ரோகித் சர்மா!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் 4வது டெஸ்ட் போட்டி வரும் 4ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது.

3வது டெஸ்ட் போட்டியின் பிட்ச் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. பிட்ச் மோசமானதாக இல்லை என்று துவக்க வீரர் ரோகித் சர்மாவும் விளக்கம் அளித்திருத்தார்.

இந்நிலையில் 4வது போட்டியின் பிட்ச் எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்காக ஆவலாக உள்ளதாக ரோகித் சர்மா தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

4வது டெஸ்ட் போட்டி

4வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் 4வது போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் வரும் 4ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது. கடந்த 3வது போட்டியும் அதே மைதானத்தில் நடைபெற்ற நிலையில் இரு தினங்களில் போட்டி முடிந்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

பிட்ச் குறித்த விமர்சனம்

பிட்ச் குறித்த விமர்சனம்

இந்த போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதையடுத்து பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அமைந்திருந்ததாக முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் இத்தகைய பிட்ச்களில் விளையாடும்போது பேட்ஸ்மேன்கள் தீவிரத்தை காட்ட வேண்டும் என்றும் ரோகித் சர்மா அந்த போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்திருந்தார்.

தெளிவான மனநிலை வேண்டும்

தெளிவான மனநிலை வேண்டும்

வெறுமனே பந்துகளை தடுத்து ஆடினால் மட்டும் போதாது என்றும் கடினமான பந்தை எதிர்கொள்ளும்போது அதை சிறப்பாக கையாள வேண்டும என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் இத்தகைய பிட்ச்களில் விளையாடும்போது தெளிவான மனநிலையில் வீரர்கள் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.

பிட்ச் குறித்து அறிய விருப்பம்

பிட்ச் குறித்து அறிய விருப்பம்

இந்நிலையில் வரும் 4ம் தேதி 4வது டெஸ்ட் போட்டி அதே மைதானத்தில் துவங்கி நடைபெறவுள்ள நிலையில், 4வது டெஸ்ட் போட்டியின் பிட்ச் எப்படி இருக்கும் என்று அறிய விரும்புவதாக ரோகித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் மைதானத்தில் தான் படுத்திருப்பது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Story first published: Monday, March 1, 2021, 13:35 [IST]
Other articles published on Mar 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+